You are now leaving GSK’s website and are going to a website that is not operated/controlled by GSK. Though we feel it could be useful to you,we are not responsible for the content/service or availability of linked sites. You are therefore mindful of these risks and have decided to go ahead.

Agree Agree Agree Stay
மொழியை மாற்றவும்
Shingles
மொழியை மாற்றவும்

ஒரே தடுப்பூசி உங்கள் குழந்தையை டிப்தீரியா (தொண்டை தொற்று) மற்றும் பிற தீங்களிக்கும் நோய்களில் இருந்து காக்கிறது.
குறைந்தளவு ஊசிகள், குழந்தைகளுக்கான அதிக பாதுகாப்பு

6-இன்-1 தடுப்பூசி என்றால் என்ன?

6 இன் 1 என்பது கூட்டு தடுப்பூசியாகும், இது ஒரே ஊசியில் 6 நோய்களுக்கு எதிராக குழந்தைகளைப் பாதுகாக்கும். [டிப்தீரியா, டெட்டனஸ், பெர்டூசிஸ் (கக்குவான் இருமல்), போலியோமைலிடிஸ், ஹீமோஃபிலஸ் இன்ஃப்ளூயன்சா டைப் பி மற்றும் ஹெபடைடிஸ் பி] தனித்தனியான தடுப்பூசிகள் மூலம் பெறுவது போன்ற பாதுகாப்புடன் குழந்தைகள் குறைவாகவே ஊசி குத்தல்களைப் பெறுகிறார்கள்.

6-இன்-1 தடுப்பூசியின் நன்மைகள் என்ன?

குழந்தைகளுக்கான நன்மைகள்
தக்க-சமயத்தில் பாதுகாப்பு குறைவான ஊசி குத்தல்கள் பலprotection
இன்செக்ஷன்கள் மற்றும் அசௌகர்யம் இல்லாமல் குறைந்த வலிpricks

பெற்றோர்களுக்கான
நன்மைகள் குறைவான அசௌகர்யம் குழந்தை மருத்துவரிடம்
குறைவான சந்திப்புக்கள் பணி அல்லது குடும்ப செயல்பாடுகளில்
ஈடுபடாமல் இருக்கும் நேரம் குறைவு

6-இன்-1 தடுப்பூசியை என் குழந்தை எப்போது பெற்றிடவேண்டும்?

சரியான நேரத்தில் 6-இன்-1 தடுப்பூசியை போட்டுக்கொள்வதற்கு தயவுசெய்து உங்கள் குழந்தை மருத்துவரை கலந்தாலோசிக்கவும்.

கூட்டு தடுப்பூசிக்கு எதிராக தனித்தனி தடுப்பூசிகள் உடன் ஏதேனும் கூடுதல் பக்க விளைவுகள் உள்ளனவா?

கூட்டு தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் பொதுவாக தனித்தனியாக வழங்கப்படும் தனிப்பட்ட தடுப்பூசிகளைப் போலவே இருக்கும், மேலும் பொதுவாக லேசானவையே. கூட்டு தடுப்பூசி கொண்டு ஊசி குத்தப்பட்ட இடத்தில் சற்று அதிக வலி அல்லது வீக்கம் இருக்கலாம். ஆனால் உங்கள் பிள்ளைக்கு தனித்தனியாக ஊசி போடப்பட்டால், ஒன்றுக்கு பதிலாக இரண்டு அல்லது மூன்று இடங்களில் வலி அல்லது வீக்கம் இருக்கலாம். ஏதேனும் தடுப்பூசி மூலம் உங்கள் குழந்தைக்கு மிதமான அல்லது தீவிரமான பக்கவிளைவுகள் இருந்தால், உங்கள் குழந்தை மருத்துவரிடம் தெரிவிக்கவும்.

GSK இன் 6 இன் 1 தடுப்பூசி விழிப்புணர்வு முயற்சி
கைக்குழந்தைகளுக்கு 6 அடிக்க உதவும் GSK இந்தியாவின் விழிப்புணர்வு முயற்சியில் தோனி இணைந்தார்!

புதிதாகப் பிறந்த குழந்தைகளை ஆபத்தில் தள்ளக்கூடிய 6 நோய்கள்



போலியோ

போலியோ என்றால் என்ன, என் குழந்தையை அது எப்படி தாக்கும்?

போலியோ என்பது வைரஸால் ஏற்படும் அதிகளவில் பரவுகின்ற நோயாகும். இது நரம்பு மண்டலத்தைப் பாதித்து, பக்கவாதத்தையும், சுவாசிப்பதில் சிரமத்தையும், சில சமயங்களில் மரணத்தையும் கூட ஏற்படுத்தும். போலியோ முக்கியமாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாதிக்கிறது என்பதுடன் இது அதிகளவில் தொற்றக்கூடியதாகும். இது முக்கியமாக மல-வாய்வழி அல்லது பொதுவாக செல்லும் இடம் (எடுத்துக்காட்டாக, அசுத்தமான தண்ணீர் அல்லது உணவு) மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகிறது. மேலும், உங்கள் குழந்தை அசுத்தமான பொம்மைகள் போன்ற பொருட்களை வாயில் வைத்தல், அவர்களுக்கு தொற்று ஏற்படலாம்.

என் குழந்தைக்கு போலியோ வந்தால் என்ன ஆகும்?

சிடிசி-யின் படி, போலியோ வைரஸ் தொற்று உள்ள 4 பேரில் ஒருவருக்கு தொண்டை புண், காய்ச்சல், சோர்வு, குமட்டல், தலைவலி மற்றும் வயிற்று வலி போன்ற காய்ச்சல் அறிகுறிகள் இருக்கும். நோயாளிகளில் ஒரு பகுதியினருக்கு மூளை மற்றும் முதுகுத் தண்டு தொடர்பான அறிகுறிகள் ஏற்படலாம். பக்கவாதம் என்பது போலியோவுடன் தொடர்புடைய மிகக் கடுமையான அறிகுறியாகும். இது நிரந்தரமாக இயலாமை மற்றும் மரணத்திற்கு ஏற்படச்செய்யும்.

போலியோவிலிருந்து புதிதாக பிறந்த என் குழந்தையை பாதுகாப்பதற்கான வழிகள் என்ன?

போலியோவை தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான். மற்ற நடவடிக்கைகளில் நல்ல சானிடேஷன் மற்றும் சரியான சுகாதாரம் அடங்கும். போலியோவுக்கு எதிரான தடுப்பூசி பற்றிய கூடுதல் தகவல்களைப் பற்றி உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.

டிப்தீரியா

டிப்தீரியா என்றால் என்ன, என் குழந்தையை அது எப்படி தாக்கும்?

டிப்தீரியா என்பது கடுமையான ஒரு பாக்டீரியா தொற்றாகும், இது பொதுவாக மூக்கு மற்றும் தொண்டையின் சளி சவ்வுகளை பாதிக்கிறது. டிப்தீரியா பொதுவாக இவற்றின் மூலம் பரவுகிறது:

- பாதிக்கப்பட்ட நபர் இருமும்போது அல்லது தும்மும்போது வரும் மூக்குவழி அல்லது வாய்வழியாக வரும் துளிகள்

- பாதிக்கப்பட்ட திறந்திருக்கும் இரணம் அல்லது சீழ்வடியும் புண்களுடன் நெருக்கமாக இருப்பது

என் குழந்தைக்கு டிப்தீரியா ஏற்பட்டால் என்ன ஆகும்?

டிஃப்தீரியாவின் அறிகுறிகளில் பலவீனம், தொண்டை புண், காய்ச்சல் மற்றும் கழுத்தில் வீங்கிய சுரப்பிகள் ஆகியவை அடங்கும். தொண்டையில் தடிமனான பூச்சு உருவாகலாம், இது சுவாசிப்பதில் சிரமம் அல்லது விழுங்குவதில் சிரமம் மற்றும் மூச்சுக்குழாய் அடைப்பு, இதய பாதிப்பு, நரம்பு பாதிப்பு, நுரையீரல் தொற்று மற்றும் பக்கவாதம் போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

டிப்தீரியாவிலிருந்து என் குழந்தையை எவ்வாறு பாதுகாப்பது?

டிப்தீரியாவை தடுப்பூசி மூலம் தடுக்கலாம். டிப்தீரியா தடுப்பூசி பொதுவாக டெட்டனஸ் மற்றும் கக்குவான் இருமலுக்கான (பெர்டுசிஸ்) தடுப்பூசிகளுடன் இணைக்கப்படுகிறது. மற்ற ஆன்டிஜென்களுடன் டிப்தீரியா தடுப்பூசி கூட்டாக கொடுப்பது என்பது குழந்தை பருவத்தின் போது மருத்துவர்கள் பரிந்துரைக்கும் குழந்தை பருவ நோய்த்தடுப்புகளில் ஒன்றாகும். நோய்வாய்ப்பட்ட எந்தவொரு நபரிடமிருந்தும் குழந்தையை விலக்கி வைப்பது உட்பட அனைத்து சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் ஒருவர் உறுதி செய்ய வேண்டும்.

பெர்டுசிஸ்

பெர்டுசிஸ் என்றால் என்ன, என் குழந்தையை அது எப்படி தாக்கும்?

பெர்டுசிஸ் (கக்குவான் இருமல் என்றும் அழைக்கப்படுகிறது) என்பது மிக அதிகளவில் தொற்றக்கூடிய சுவாச தொற்றாகும், இது மிகவும் கடுமையானதாக இருக்கலாம், குறிப்பாக புதிதாகப் பிறந்த குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகளுக்கு.

பெர்டுசிஸ் என்பது தொற்றிப்பரவக்கூடிய துளிகளினால் காற்றில் பரவுகிறது, எனவே இது மற்ற நபர்கள் இருமும்போது அல்லது தும்மும்போது அல்லது நோயால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருக்கமாக இருப்பதால் எளிதில் பரவுகிறது. புதிதாய் பிறந்த குழந்தைகளுக்கு பெர்டுசிஸ் நோய்த்தொற்றானது முக்கியமாக தாய்மார்கள் மூலம் பரவுகிறது.

என் குழந்தைக்கு பெர்டுசிஸ் ஏற்பட்டால் என்ன ஆகும்?

குழந்தைகள் மற்றும் 2 மாதங்களுக்கும் குறைவான பச்சிளம் குழந்தைகளுக்கு கடுமையான சிக்கல்களை பெர்டுசிஸ் ஏற்படுத்தும். கைக்குழந்தைகள் மற்றும் இளம் குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாவதுடன் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுவதன் காரணமாக நீல நிறமாக மாறலாம்.

பெர்டுசிஸ்-ல் இருந்து புதிதாக பிறந்த என் குழந்தையை பாதுகாப்பதற்கான வழிகள் என்ன?

குழந்தைக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் பெர்டுசிஸைத் தடுக்கலாம். இளம் குழந்தைகளில் பெர்டுசிஸைத் தடுப்பதற்கான பிற உத்திகளில் தாய்மார்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய தொடர்புகளுக்கு தடுப்பூசி போடுவது அடங்கும். மற்ற நடவடிக்கைகளில் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து தனிமைப்படுத்தல் அடங்கும். மேலும் விவரங்களுக்கு தயவுசெய்து உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ளவும்.

டெட்டனஸ்

டெட்டனஸ் என்றால் என்ன, என் குழந்தையை அது எப்படி தாக்கும்?

டெட்டனஸ் என்பது க்ளோஸ்ட்ரிடியம் டெட்டானி என்ற பாக்டீரியத்தால் ஏற்படும் கடுமையான, பொதுவாக ஆபத்தான நோயாகும். இது எலும்பு தசைகளின் பொதுவான விளைப்பு மற்றும் பிடிப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.

தசை விரைப்பானது பொதுவாக தாடை (தாடைகள் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளும் நோய்) மற்றும் கழுத்தை உள்ளடக்கியது, பின்னர் முழு உடலிலும் பரவக்கூடும். பாக்டீரியா வித்திகள் பொதுவாக மண், தூசி மற்றும் உரத்தில் காணப்படுகின்றன மற்றும் தோலில் ஏற்படும் உடைப்புகள் மூலம் உடலில் நுழைகின்றன - பொதுவாக அசுத்தமான பொருட்களால் ஏற்படும் வெட்டுக்கள் அல்லது திறந்த காயங்கள்.

என் குழந்தைக்கு டெட்டனஸ் ஏற்பட்டால் என்ன ஆகும்?

புதிதாகப் பிறந்த குழந்தை டெட்டனஸ் அறிகுறிகளில் தசைப்பிடிப்பு அடங்கும், இது பெரும்பாலும் புதிதாகப் பிறந்த குழந்தையினால் உறிஞ்சுவதற்கு முடியாமல் போவது அல்லது தாய்ப்பால் குடிக்க இயலாமை மற்றும் அதிகப்படியான அழுகை ஆகியவற்றால் ஏற்படுகிறது.

வயதான குழந்தைகள் மற்றும் பெரியவர்களில், இது தாடையின் தசைப்பிடிப்பு, வலியுடன் தசைகள் இறுகுதல் மற்றும் வலிப்புத்தாக்கங்களை ஏற்படுத்தும். இது எலும்பு முறிவு, சுவாசிப்பதில் சிரமம், குரல்வளையில் பிடிப்பு போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

டெட்டனஸ்-ல் இருந்து புதிதாக பிறந்த என் குழந்தையை பாதுகாப்பதற்கான வழிகள் என்ன?

தடுப்பூசி, நல்ல முறையில் காயத்தைப் பராமரிப்பது மற்றும் டெட்டனஸ் நோய்த்தொற்றைத் தடுக்க உதவும் பராமரிப்பு ஆகியவற்றை சிடிசி பரிந்துரைக்கிறது. டெட்டனஸ் தடுப்பூசி போடாத யாருக்காவது கடுமையான காயம் ஏற்படும் சூழலில் டெட்டனஸ் ஏற்படாமல் தடுப்பதற்கு மருத்துவர்கள் ஒரு மருந்தையும் பயன்படுத்தலாம்.

ஹீமொஃபிலஸ் இன்ஃப்ளுயன்சே டைப் பி (எச்.ஐ.பி)

ஹீமொஃபிலஸ் இன்ஃப்ளுயன்சே டைப் பி என்றால் என்ன, என் குழந்தையை அது எப்படி தாக்கும்?

ஹீமொஃபிலஸ் இன்ஃப்ளுயன்சே நோய் எச். இன்ஃப்ளூயன்ஸா என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

பெயர் இருந்தபோதிலும், எச். இன்ஃப்ளூயன்ஸா இன்ஃப்ளூயன்ஸாவை (காய்ச்சலை) ஏற்படுத்தாது. ஹீமோபிலஸ் இன்ஃப்ளூயன்ஸா டைப் பி (எச்.ஐ.பி) என்பது ஒரு பாக்டீரியா ஆகும், இது லேசான காது நோய்த்தொற்றுகள் முதல் கடுமையான நிமோனியா, மூளைக்காய்ச்சல் மற்றும் பிற ஊடுறுவும் நோய்கள் வரை பல்வேறு வகையான தொற்றுநோய்களை கிட்டத்தட்ட 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மட்டுமே ஏற்படுத்தக்கூடியது. மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் போது, இருமல் அல்லது தும்மல் மூலம், எச்.ஐ.பி உள்ளிட்ட எச். இன்ஃப்ளூயன்ஸாவை மக்கள் பரப்பலாம். உடல்நிலை சரியில்லாமல் இருப்பவர்களுக்குக் கூட அவர்களின் மூக்கு மற்றும் தொண்டையில் பாக்டீரியா இருக்கலாம் அத்துடன் பாக்டீரியாவை பரப்பலாம்.

என் குழந்தைக்கு எச்.ஐ.பி ஏற்பட்டால் என்ன ஆகும்?

நிமோனியா, இரத்த ஓட்ட தொற்று மற்றும் மூளைக்காய்ச்சல் (மெனிஞ்சிடிஸ்) ஆகியவை எச்.ஐ.பி மூலம் ஏற்படும் மிகவும் பொதுவான ஊடுறுவும் நோய்களாகும். மூளைக்காய்ச்சல் என்பது மூளை மற்றும் தண்டு வடத்தின் உறையில் ஏற்படும் தொற்று ஆகும். இது ஆரம்பத்தில் அதிக காய்ச்சல், தலைவலி, மிகக் குறைந்தளவு உணவு மற்றும் நீர் அருந்துதல் ஆகியவற்றுடன் இருக்கலாம். சிடிசி இன் படி, எச்.ஐ.பி ஊடுறுவும் நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுகிறது. சிகிச்சை கொடுக்கப்பட்டாலும் கூட, எச்.ஐ.பி மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 20 குழந்தைகளில் 1 குழந்தை இறக்கின்றது. எச்.ஐ.பி மூளைக்காய்ச்சலில் இருந்து தப்பிக்கும் 5 குழந்தைகளில் 1 குழந்தைக்கு மூளை பாதிப்பு ஏற்படலாம் அல்லது காது கேளாதவர்களாக மாறலாம்.

எச்.ஐ.பி -யில் இருந்து புதிதாக பிறந்த என் குழந்தையை பாதுகாப்பதற்கான வழிகள் என்ன?

பெரும்பாலான கடுமையான எச்.ஐ.பி நோயைத் தடுக்கும் திறன் கொண்ட ஒரே பொது உடல்நல கருவியாக தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு பரிந்துரைக்கிறது. எச்.ஐ.பி தடுப்பூசிகள் பச்சிளம் குழந்தையின் ஆரம்பகாலத்தில் கொடுக்கப்பட்டாலும் பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் கருதப்படுகிறது. மற்ற தடுப்பு நடவடிக்கைகளில் நல்ல சானிடேஷன் மற்றும் சரியான சுகாதாரம் ஆகியவை அடங்கும்.

ஹெபடைடிஸ் பி

ஹெபடைடிஸ் பி

ஹெபடைடிஸ் பி என்றால் என்ன, என் குழந்தையை அது எப்படி தாக்கும்?

ஹெபடைடிஸ் பி என்பது வைரஸால் ஏற்படும் கல்லீரல் தொற்றாகும், இது இரத்தம் மற்றும் உடல் திரவங்கள் மூலம் பரவுகிறது. ஹெபடைடிஸ் பி குழந்தைகளில் லேசானது முதல் குறுகியகால நோயாக ஏற்படலாம். இது பல ஆண்டுகளாக நீடித்து இறுதியில் கடுமையான கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தலாம்.

நோயுற்ற தாய், பிரசவத்தின் போது குழந்தைக்கு தொற்றை பரப்பலாம். ஹெபடைடிஸ் பி வைரஸால் பாதிக்கப்பட்ட இரத்தம், விந்து அல்லது பிற உடல் திரவம் தொற்று இல்லாத நபரின் உடலில் நுழையும் போது ஹெபடைடிஸ் பி வைரஸ் பரவுகிறது.

என் குழந்தைக்கு ஹெபடைடிஸ் பி ஏற்பட்டால் என்ன ஆகும்?

சிடிசி-யின் படி, 5 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் சுமார் 30%-50% நபர்களுக்கு கடுமையான ஹெபடைடிஸ் பி நோயின் அறிகுறிகள் உள்ளது. 5 வயதுக்குட்பட்ட பெரும்பாலான குழந்தைகளுக்கும் நோயெதிர்ப்பு குறைபாடு போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கும் பொதுவாக அறிகுறிகள் இல்லை.

சோர்வு, காய்ச்சல், பசியின்மை, குமட்டல், தோல் அல்லது கண்களில் மஞ்சள் நிறம், வயிற்று வலி மற்றும் கருமையான சிறுநீர் ஆகியவை ஹெபடைடிஸ் பியின் அறிகுறிகளாகும்.

தோராயமாக 90% பாதிக்கப்பட்ட குழந்தைகளில் (அதாவது 1 வயதுக்கு குறைவான குழந்தைகள்) நாள்பட்ட தொற்றுநோய் உருவாகிறது. குழந்தை வளர வளர ஆபத்து குறைகிறது. 1 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளில் சுமார் 25%-50% பேருக்கு நாள்பட்ட ஹெபடைடிஸ் பி உருவாகிறது. நாள்பட்ட ஹெபடைடிஸ் பி காரணமாக கல்லீரல் சேதம், சிரோசிஸ், கல்லீரல் புற்றுநோய் மற்றும் மரணம் கூட ஏற்படலாம்.

கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா.

இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.

உங்கள் குழந்தையின் பாதுகாப்பில் இருக்கக் கூடிய இடைவெளிகளைக் கண்டறியவும்

உங்கள் குழந்தைக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்கிறதா அல்லது இல்லையா என்பதைச் சரிபார்க்க தனிப்பயனாக்கப்பட்ட காலநிரலை உருவாக்கவும்*

இப்போதே பயன்படுத்தத் தொடங்குங்கள்

2021 (c) கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல் லிமிட்டெட். அனைத்து உரிமைகளும் பதிவுசெய்யப்பட்டுள்ளன
தனியுரிமைக் கொள்கை | குக்கீகள் கொள்கை | பொறுப்பு துறப்பு

பொறுப்பு துறப்பு
இந்த இணையதளம் இந்தியாவில் வசிப்பவர்களுக்கு மட்டுமே.
ஐஏபி –யின் (இந்தியன் அகாதெமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்) வழக்கமான மற்றும் கேட்ச்-அப் பரிந்துரைகளில் காணப்படும் தடுக்கக்கூடிய நோய்களின் பட்டியலில் உள்ளவையே இங்கு குறிப்பிடப்படும் நோய்களின் பட்டியல் ஆகும். குழந்தைகளைப் பாதிக்கும் நோய்கள் இந்தப் பட்டியலில் காணப்படுபவைகளுக்கு மேலேயேஇருக்கலாம். மேலதிகத் தகவலுக்கு உங்கள் குழந்தைநல மருத்துவரைக் கலந்தாலோசிக்கவும்.
கிளேக்ஸோஸ்மித்கிளைன் பார்மசூட்டிக்கல்ஸின் ஒரு பொது விழிப்புணர்வு முன்முயற்சி. டாக்டர். அன்னி பெசன்ட் சாலை, வோர்லி, மும்பை 400 030, இந்தியா. இந்த உள்ளடக்கத்தில் காணப்படும் தகவல் பொது விழிப்புணர்வுக்கானது மட்டுமே. இந்த உள்ளடக்கத்தில் உள்ள எதுவும் மருத்துவ ஆலோசனையைக் கொண்டிருக்கவில்லை. உங்கள் கோளாறுகள் பற்றிய எந்த ஒரு மருத்துவ ரீதியான சந்தேகம், கேள்விகள் மற்றும் கவலைகள் குறித்து உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள். இங்கே சுட்டிக் காட்டப்படும் தடுப்பூசி அட்டவணை முழுமை பெற்றது அல்ல. உங்கள் குழந்தை நல மருத்துவரிடம் முழுத் தடுப்பூசி அட்டவணை பற்றிய அறிவுரையைப் பெறவும். இந்த உள்ளடக்கத்தில் காட்டப்படும் மருத்துவர் விளக்கும் நோக்கத்துக்காகவே பயன்படுத்தப்படுகிறார். இவர் ஒரு தொழில்ரீதியான மாடல் மட்டுமே. நோய் விளக்கும் சின்னங்கள்/படங்கள் யாவும் விளக்கும் நோக்கத்திற்காக மட்டுமானவையே.
CL code: NP-IN-ABX-WCNT-210003, DoP Dec 2021

பகிரவும்
Vaccination Tracker