மின்சார அதிர்வுகள்
ஹெர்பீஸ் ஜோஸ்டர் என்றும் அழைக்கப்படும் ஷிங்கிள்ஸ் புண் (அக்கி), என்பது சின்னம்மை (வெரிசெல்லா) நோயை உண்டாக்கும் வைரஸான வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் என்னும் அதே வைரஸ் உடலில் மீண்டும் செயல்படும்போது ஏற்படக்கூடிய ஒரு வைரஸ் தொற்றாகும். சின்னம்மையிலிருந்து மீண்ட பிறகு, இந்த வைரஸானது செயலற்ற நிலையில் நரம்பு மண்டலத்தில் இருக்கும், மேலும் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஷிங்கிள்ஸ் (அக்கி) ஆக மீளுருவாக்கம் எடுக்கக்கூடும் 1.
நோயெதிர்ப்பு மண்டலமானது காலப்போக்கில் இயற்கையாகவே பலவீனமடைவதால் வயதுக்கு ஏற்ப இந்த மறுசெயல்பாடு மிகவும் பொதுவான ஒன்றாகும். எனவே, வயதானவர்கள் ஷிங்கிள்ஸ் (அக்கி) ஏற்படும் அதிக ஆபத்தில் உள்ளனர் 2,3.
பொதுவாக ஷிங்கிள்ஸ் (அக்கி) ஆனது உடலின் ஒரு பக்கத்தில் ஒரு நரம்புப் பாதைத் தொடர்ந்து ஒரு நேர்கோடாக கொப்புளங்களை உருவாக்கும் வலிமிகுந்த சினப்பை ஏற்படுத்துகிறது. இந்தச் சினப்பு, முதுகு, கைகள், தொடைகள் அல்லது கண்கள் அல்லது காதுகள் போன்ற உணர்திறன் கொண்ட பகுதிகள் உள்ளிட்ட தலை ஆகியவற்றில் தோன்றலாம் 3. ஷிங்கிள்ஸ் (அக்கி) உடன் தொடர்புடைய வலியானது பெரும்பாலும் எரியும் உணர்வு, குத்தும் உணர்வு அல்லது அதிர்வு போன்றவை என விவரிக்கப்படுகிறது 4#. வலியானது அன்றாட நடவடிக்கைகள் அல்லது தூக்கத்தில் கூட இடையூறு ஏற்படுத்தலாம்5#.
ஷிங்கிள்ஸ் (அக்கி) நோயிலிருந்து பெரும்பாலான மக்கள் முழுமையாக குணமடைந்தாலும், சிலர் சிக்கல்களை அனுபவிக்கலாம்
இது ஷிங்கிள்ஸ் (அக்கி) நோய்க்கு பிறகு ஏற்படக்கூடிய உடல்நலச் சிக்கல்களின் முழுமையான பட்டியல் அல்ல. மேலும் விவரங்களுக்கு மருத்துவரை அணுகவும்.
#Individual patient symptoms of Shingles may vary. These statements are based on some patients’ descriptions of their shingles' pain and do not represent every patient’s experience.