குழந்தைகளில் சின்னம்மை தடுப்பு: அறிகுறிகள் மற்றும் வெரிசெல்லா தடுப்பூசி மூலம் பாதுகாப்பு

sticker banner

கற்பனை படம், விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே

மருத்துவ ரீதியாக வேரிசெல்லா 1 என அழைக்கப்படும் சின்னம்மை நோயானது, முதன்மையாக குழந்தைகளை பாதிக்கும் ஒரு மிகவும் தொற்றக்கூடிய வைரஸ் தொற்று 2 ஆகும்1. இது பெரும்பாலும் மிதமான குழந்தை பருவ நோய் 1 என்று கருதப்பட்டாலும், இது சில நேரங்களில் கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் மற்றும் அரிதான சந்தர்ப்பங்களில், உயிருக்கு ஆபத்தானதாக மாறும் 1.  

இருப்பினும், உங்கள் குழந்தையை சின்னம்மை நோயிலிருந்து பாதுகாக்க ஒரு பயனுள்ள வழி உள்ளது: தடுப்பூசி 1,3. சின்னம்மை தடுப்பூசியானது  வைரஸிலிருந்து பாதுகாக்கிறது, கடுமையான நோய்த்தொற்றுகள் மற்றும் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது 1,3

இந்த வலைப்பதிவானது சின்னம்மையின் அறிகுறிகள், சிக்கல்கள் உள்ளிட்ட விவரங்களையும் மற்றும் பொதுவான ஆனால் தடுக்கக்கூடிய நோயிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பாக வைத்திருப்பதில் வேரிசெல்லா தடுப்பூசியின் முக்கியத்துவம் ஆகியவற்றையும் ஆராயும். மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்!  

 

சின்னம்மை நோய் குறித்து புரிந்துகொள்வது  

Chickenpox

கற்பனை படம், விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே

சின்னம்மை என்பது ஒரு கடுமையான தொற்று நோயாகும், இது அரிப்புடன் கூடிய சிவப்பு நிற சினப்பை கொண்டிருக்கும், இது இறுதியில் திரவம் கொண்ட கொப்புளங்களாக உருவாகிறது 1,2. இந்த நோய் வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் மூலம் ஏற்படுகிறது, இது ஹெர்பெஸ் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த அதிகம் தொற்றக்கூடிய DNA வைரஸ் ஆகும் 1.

 

வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரசானது ஒருவருக்கு நபர் காற்றுவழி உமிழ்நீர்த்துளிகள் அல்லது நேரடி தொடர்பு மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்ட ஒருவர் சுவாசிக்கும்போது, ​​இருமும்போது, ​​தும்மும்போது அல்லது பேசும்போது, ​​வைரஸைக் கொண்ட சிறிய உமிழ்நீர் துளிகள் காற்றில் வெளியாகி மற்றவர்களால் சுவாசிக்கப்படலாம், இது தொற்றுக்கு வழிவகுக்கும். பாதிக்கப்பட்ட நபரின் கொப்புளங்களிலிருந்து வரும் திரவத்தைத் தொடுவதன் மூலமும் சின்னம்மை பரவலாம் 1,2.  

 

சின்னம்மை உள்ள ஒருவருடன் நெருங்கிய தொடர்பு கொள்வது தொற்றுநோயை ஏற்படுத்தும், குறிப்பாக நீங்கள் தடுப்பூசி போட்டிருக்காதவராக இருந்தாலோ அல்லது இதற்கு முன்பு நோய்வாய்ப்பட்டிருக்கவில்லை என்றாலோ1.  

 

சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், சினப்பு தோன்றுவதற்கு 1 முதல் 2 நாட்களுக்கு முன்பு வரை, அனைத்து கொப்புளங்களும் உடைந்து மேலோடு உருவாகும் வரை தொற்றுக்கு வழிவகுக்கும் நபராக இருப்பார்1. இந்த நோய் பொதுவாக 1 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளை பாதிக்கிறது என்றாலும், பெரிய வயதுடைய குழந்தைகள், வயது வந்தவர்கள் மற்றும் இதற்கு முன்னர் சின்னம்மை நோயால் பாதிக்கப்படாத தடுப்பூசி போட்டிராத நபர்களும் ஆபத்தில் உள்ளனர் 1.

 

பொதுவாக, சின்னம்மை சுமார் 5 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும் 1. இருப்பினும், சில சந்தர்ப்பங்களில், இது நிமோனியா, பாக்டீரியா தொற்றுகள், மூளை அழற்சி (மூளைக்காய்ச்சல்), நீரிழப்பு அல்லது இரத்த ஓட்ட தொற்று (செப்சிஸ்) 1,2 போன்ற கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இந்த சிக்கல்கள் அதிக ஆபத்துள்ள குழுக்களில் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது, இதில் பின்வருபவர்கள் உள்ளடங்குவார்கள் 1,2 :

 

  • குறைப்பிரசவ குழந்தைகள்

  • கைக்குழந்தைகள்

  • வளர் இளம் பருவத்தினர்

  • வயது வந்தவர்கள்

  • கர்ப்பிணிகள்

  • பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் உள்ளவர்கள்

     

தடுப்பூசியானது சின்னம்மை நோயால் பாதிக்கப்படுவதற்கான அபாயத்தையும் கடுமையான அறிகுறிகள் அல்லது சிக்கல்களை அனுபவிப்பதையும் திறம்படக் குறைக்கிறது, இது உங்கள் குழந்தை மற்றும் அவர்களைச் சுற்றியுள்ளவர்களைப் பாதுகாக்க உதவுகிறது 1,3.

 

சின்னம்மை நோயின் பொதுவான அறிகுறிகள்

 

வைரஸுக்கு வெளிப்படுவதற்கும் அறிகுறிகள் தோன்றுவதற்கும் இடையிலான நேரமான சின்னம்மை நோய்க்கான சராசரி அடைகாப்பு காலம் 14 முதல் 15 நாட்கள் வரை இருக்கும். இருப்பினும், அறிகுறிகள் வெளிப்பட்ட 10 முதல் 21 நாட்களில் தோன்றலாம்1.

 

சின்னம்மை நோயின் முதன்மை அறிகுறி அரிக்கும், திரவம் நிறைந்த கொப்புளங்களாக உருவாகும் ஒரு சினப்பாகும்,  இது இறுதியில் சிரங்குகளாக மாறும். இந்த சினப்பானது பொதுவாக மார்பு, முதுகு மற்றும் முகத்தில் தொடங்கி வாய், கண் இமைகள், உச்சந்தலை, கைகள் மற்றும் கால்கள் உட்பட முழு உடலுக்கும் பரவுகிறது. சில நேரங்களில், சளி சவ்வுகள் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகளும் பாதிக்கப்படலாம் 1,2.  

 

சின்னம்மை உள்ள ஒருவருக்கு 1000க்கும் மேற்பட்ட புண்கள் 1 உருவாகலாம், மேலும் அவை அனைத்தும் காய்ந்து சிரங்குகளாக மாற பொதுவாக ஒன்று முதல் இரண்டு வாரங்கள் ஆகும்.  

கூடுதலாக, சினப்பு ஏற்படுவதற்கு 1 முதல் 2 நாட்களுக்கு முன்பு வேறு சில அறிகுறிகள் தோன்றக்கூடும், அவற்றில் உள்ளடங்குபவை 2:

  • லேசான காய்ச்சல்

  • மூக்கொழுகல் மற்றும் இருமல்

  • களைப்பு அல்லது அசதி

  • தலைவலி

     

சின்னம்மை பொதுவாக லேசானதாக1,2 இருந்தாலும், குறிப்பாக அதிக ஆபத்துள்ள நபர்களில் 1இது கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இந்த சிக்கல்கள், ஆரோக்கியமான நபர்களில் அரிதானவை என்றாலும், பின்வருபவை உள்ளடங்கலாம்1:

 

  • குரூப் A ஸ்ட்ரெப்டோகாக்கால் தொற்றுகள் போன்ற தோல் மற்றும் மென்மையான திசுக்களின் பாக்டீரியா தொற்றுகள்

  • நுரையீரல் தொற்றுகள் (நிமோனியா)

  • மூளை தொற்றுகள் அல்லது அழற்சி (மூளையழற்சி, சிறுமூளை அட்டாக்ஸியா)

  • இரத்தப்போக்கு பிரச்சினைகள் (இரத்தப்போக்கு சிக்கல்கள்)

  • செப்சிஸ்

  • நீரிழப்பு

     

கடுமையான சந்தர்ப்பங்களில், சின்னம்மை நோய்க்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட தேவைப்படலாம் மற்றும் மரணத்தை ஏற்படுத்தலாம் 1.

 

கர்ப்பத்தின் முதல் ஆறு வாரங்களுக்குள் ஒரு பெண் சின்னம்மையால் பாதிக்கப்பட்டால், அது கருவிலுள்ள குழந்தைக்கு கடுமையான அசாதாரணங்களை ஏற்படுத்தும். பிரசவ நேரம் நெருங்கும் சமயத்தில் குழந்தையின் நோயெதிர்ப்பு மண்டலம் இன்னும் முழுமையாக வளர்ச்சி அடைந்திருக்காது என்பதால் தொற்று ஏற்படுவது குழந்தையின் உயிருக்கு ஆபத்தானதாக இருக்கலாம், 1.

 

சின்னம்மை நோயின் மற்றொரு சாத்தியமான சிக்கல் அக்கி (ஷிங்கிள்ஸ்) அல்லது ஹெர்பெஸ் ஜோஸ்டர் ஆகும். சின்னம்மை நோயிலிருந்து மீண்ட பிறகு, வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் உடலின் உணர்வு நரம்பு கேங்க்லியாவில் செயலற்ற நிலையில் இருக்கும். இந்த வைரஸ் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செயல்படக்கூடும், இது ஷிங்கிள்ஸை ஏற்படுத்துகிறது, இது வலிமிகுந்த சினப்பை ஏற்படுத்தும். அக்கி (ஷிங்கிள்ஸ்) உள்ள வயது வந்தவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத மற்றவர்களுக்கும் வைரஸைப் பரப்பலாம், இதனால் அவர்களுக்கு சின்னம்மை தொற்று உருவாகலாம் 1.

 

சின்னம்மை நோயைத் தடுப்பதில் வெரிசெல்லா தடுப்பூசியின் பங்கு

 

சின்னம்மை நோயிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு சிறந்த வழி வெரிசெல்லா தடுப்பூசி போடுவதுதான் 1,3. இந்த தடுப்பூசியானது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமான வைரஸுக்கு வெளிப்படுத்துவதன் மூலம் செயல்படுகிறது, இதனால் உடல் நோயை ஏற்படுத்தாமல் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்க அனுமதிக்கிறது 4.  

 

சின்னம்மை தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும் - இரண்டு டோஸ்களைப் பெறும் 90% க்கும் மேற்பட்ட குழந்தைகள் வைரஸிலிருந்து பாதுகாக்கப்படுவார்கள் 3. தடுப்பூசி போடப்பட்ட குழந்தைகள் வைரஸ் மூலம் பாதிக்கப்படும் சந்தர்ப்பங்களில் - பிரேக்த்ரு சிக்கன் பாக்ஸ் என்று அழைக்கப்படுகிறது - இந்த நோய் பொதுவாக லேசானதாக இருக்கும். இந்த குழந்தைகள் பெரும்பாலும் குறைந்த அளவு கொப்புளங்கள் அல்லது அவை இல்லாமலோ இருப்பார்கள், இருப்பினும் சில சிவப்பு புள்ளிகள் இன்னம் தோன்றக்கூடும் 2,3.

 

சின்னம்மை தடுப்பூசி இரண்டு டோஸ்களில் வழங்கப்படுகிறது: 5

 

  • 15 மாதங்களில் முதல் டோஸ்

  • 18 மற்றும் 24 மாதங்களுக்கு இடையில் இரண்டாவது டோஸ்

     

கூடுதலாக, தடுப்பூசியானது சின்னம்மை 1,2 உடன் தொடர்புடைய சாத்தியமான சிக்கல்களைத் தடுக்க உதவுகிறது.  

 

7-Star தடுப்பூசி திட்டம் என்பது தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்பு நடைமுறைகள் குறித்த IAP ஆலோசனைக் குழுவின் (ACVIP) வழிகாட்டுதல்களின் அடிப்படையில் ஒரு விரிவான மற்றும் நன்கு கட்டமைக்கப்பட்ட அட்டவணையாகும்5. சின்னம்மை, ஹெபடைடிஸ் ஏ, ஃப்ளூ காய்ச்சல், ரூபெல்லா, பொன்னுக்கு வீங்கி,, மூளைக்காய்ச்சல் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பதினான்கு வெவ்வேறு நோய்களை உள்ளடக்கிய ஏழு முக்கிய தடுப்பூசிகளைச் சேர்ப்பதன் மூலம் இது பரந்த அளவிலான தடுக்கக்கூடிய நோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்குகிறது.  

 

விரிவான தகவலுக்கும் உங்கள் குழந்தை 7-star பாதுகாப்பு தடுப்பூசி அட்டவணையை பின்பற்றுவதை உறுதி செய்வதற்கும், உங்கள் குழந்தை நல மருத்துவரை அணுகவும்.


முடிவுரை

 

சின்னம்மை என்பது பொதுவாக குழந்தைகளை 1,2  பாதிக்கும் அதிகம் தொற்றக்கூடிய ஆனால் தடுக்கக்கூடிய நோயாகும். அறிகுறிகள் மற்றும் சிக்கல்களைப் புரிந்துகொள்வதன் மூலமும், தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதன் மூலமும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சின்னம்மை தொடர்பான அசௌகரியம் மற்றும் அபாயங்களிலிருந்து பாதுகாக்க முடியும்.  

சின்னம்மை தடுப்பூசி நோயின் பரவலை திறம்படக் குறைக்கிறது மற்றும் கடுமையான சிக்கல்களைத் தடுக்கிறது 1,2,3. உங்கள் குழந்தை தடுப்பூசிகளை திட்டமிட்டபடி பெறுவதை உறுதிசெய்யவும், சின்னம்மை நோயைத் தடுப்பது குறித்து உங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால் விவாதிக்கவும் மேலும் விவரங்களுக்கு தயவுசெய்து உங்கள் குழந்தை நல மருத்துவரை அணுகவும். 

References

  1. Heininger U, Seward JF, (KC). Varicella. The Lancet 2006; 368:1365–1376.
  2. c=AU, & o=The State of Queensland. (n.d.). Chickenpox (varicella). Gov.au. Retrieved January 10, 2025, from https://www.qld.gov.au/health/condition/infections-and-parasites/viral-infections/chickenpox-varicella
  3. (N.d.). Hhs.gov. Retrieved January 10, 2025, from https://www.hhs.gov/immunization/diseases/chickenpox/index.html
  4. CDC. (2024, August 10). Explaining how vaccines work. Vaccines & Immunizations. https://www.cdc.gov/vaccines/basics/explaining-how-vaccines-work.html?CDC_AA_refVal=https%3A%2F%2Fwww.cdc.gov%2Fvaccines%2Fhcp%2Fconversations%2Funderstanding-vacc-work.html
  5. Indra M, Kasi SG, Shashi Kant Dhir, Wadhwa A, B. Rajsekhar, Chandra Mohan Kumar, et al. Indian Academy of Pediatrics (IAP) Advisory Committee on Vaccines and Immunization Practices (ACVIP): Recommended Immunization Schedule (2023) and Update on Immunization for Children Aged 0 Through 18 Years. Indian pediatrics/Indian Pediatrics. 2024 Jan 15;61(2):113–25.
     

CL Code: NP-IN-PVU-WCNT-240014 DoP Jan 2025

மேலும் படிக்கவும்

  • தடுப்பூசி மூலம் பருவகால காய்ச்சலில் (இன்ஃப்ளூயன்ஸா) இருந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களைப் பாதுகாப்பது

    19-03-2025
    Read more »
  • பொன்னுக்கு வீங்கி (மம்ஸ்) என்றால் என்னவென்று புரிந்துகொள்வதுடன் அதன் வெளிப்பாடுகளிலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது

    19-03-2025
    Read more »
  • கைக்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளில் இன்ஃப்ளூயன்ஸாவைத் தடுப்பது: ஒரு பெற்றோராக நீங்கள் என்ன செய்ய முடியும்?

    19-03-2025
    Read more »