தடுப்பூசி மூலம் பருவகால காய்ச்சலில் (இன்ஃப்ளூயன்ஸா) இருந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களைப் பாதுகாப்பது

sticker banner

கற்பனை படம், விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே

பருவகால காய்ச்சல் அல்லது இன்ஃப்ளூயன்ஸா என்பது ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஆயிரக்கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு தொற்று சுவாச நோயாகும் 1. இது லேசான அல்லது கடுமையான நோய்க்கு வழிவகுக்கும், சில சந்தர்ப்பங்களில், மரணத்தை விளைவிக்கும் 1. யாருக்கும் காய்ச்சல் வரலாம் என்றாலும், அதில் சில குறிப்பிட்ட குழுக்களாக இருப்பது- இளம் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள ஆரோக்கிய நிலைமைகள் அல்லது பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலத்தை கொண்டிருப்பவர்கள்- அதிக ஆபத்தில் உள்ளனர் 1,2. சொல்லப்போனால், காய்ச்சல் நோயுடன் தொடர்புடைய பெரும்பாலான மருத்துவமனையில் சேர்க்கப்படுதல் மற்றும் இறப்புகள் இந்த அதிக ஆபத்துள்ள மக்களிடையே நிகழ்கின்றன 1.

 

வயது வந்தவர்கள் மற்றும் குழந்தைகள் இருவரையும் ஃப்ளூ காய்ச்சலில் இருந்து பாதுகாக்க தடுப்பூசியானது ஒரு சிறந்த வழியாகும் 1,3. இந்த வலைப்பதிவில், காய்ச்சல் நோயைப் பற்றிய முக்கியத் தகவல்களைப் பார்ப்போம், அதன் அறிகுறிகள், சிக்கல்கள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நோயின் பரவல் மற்றும் தீவிரத்தை குறைப்பதில் தடுப்பூசி வகிக்கும் முக்கிய பங்கு ஆகியவை உள்ளடங்கும்.

 

பருவகால காய்ச்சல் (இன்ஃப்ளூயன்ஸா) பற்றிய கண்ணோட்டம்

 

காய்ச்சல் என்பது மூக்கு, தொண்டை மற்றும் நுரையீரல் உள்ளிட்ட சுவாச மண்டலத்தைத் தாக்கும் ஒரு கடுமையான வைரஸ் தொற்று ஆகும். இது பாதிக்கப்பட்ட நபரின் இருமல், தும்மல் அல்லது பேச்சிலிருந்து காற்றில் வெளியாகும் உமிழ்நீர்த்துளிகள் மூலம் பரவும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களால் ஏற்படுகிறது. இந்த சுவாச உமிழ்நீர்த்துளிகள் அருகிலுள்ள மக்களை பாதிக்கலாம். கூடுதலாக, இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் தொற்று ஏற்பட்ட கைகள் மூலம் வைரஸ் பரவலாம் 1,4.,  

பள்ளிகள் மற்றும் நர்சிங் ஹோம்கள் போன்ற நெரிசலான சூழல்களில் இத்தகைய பரவுதல் விரைவாக நிகழ்கிறது 1.

 

நான்கு வகையான இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் 1,5 உள்ளன:

 

  • இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸ்கள் அவற்றின் மேற்பரப்பில் காணப்படும் ஹேமக்ளூட்டினின் (எச்) மற்றும் நியூராமினிடேஸ் (என்) புரதங்களின் அடிப்படையில் துணை வகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன. தற்போது, ​​மக்களிடையே பொதுவாகப் பரவும் துணை வகைகளில் ஏ(எச்1என்1) மற்றும் ஏ(எச்3என்2) ஆகியவை உள்ளடங்கும். இன்ஃப்ளூயன்ஸா ஏ வைரஸ்கள் மட்டுமே ஃப்ளூ பெருந்தொற்றுகளை ஏற்படுத்தும் ஒரே இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் ஆகும்.

  • இன்ஃப்ளூயன்ஸா பி வைரஸ்கள் துணை வகைகளுக்குப் பதிலாக குழுவகைகளாக வகைப்படுத்தப்படுகின்றன, இரண்டு முக்கிய வகைகளாவன பி/யமகட்டா மற்றும் பி/விக்டோரியா ஆகும்.

  • இன்ஃப்ளூயன்ஸா சி குறைவான பொதுவானது மற்றும் பொதுவாக லேசான தொற்றுநோய்களுக்கு வழிவகுக்கிறது, இது குறைந்தபட்ச பொது ஆரோக்கிய கவலைகளை மட்டுமே கொண்டுள்ளது. இது மனிதர்களுக்கு ஏற்படும் தொற்றுநோய்களுக்கான ஒரு காரணமாகக் கருதப்படவில்லை.

  • இன்ஃப்ளூயன்ஸா டி வைரஸ்கள் கால்நடைகளை முதன்மையாக  பாதிக்கின்றன மற்றும் பிற விலங்குகளுக்கும் பரவக்கூடும், ஆனால் அவை மனிதர்களைப் பாதிக்கவோ அல்லது மனிதர்களுக்கு நோயை ஏற்படுத்தியதாகவோ தெரியவில்லை.

     

நான்கு வகையான இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்களில், ஏ மற்றும் பி வகைகள் மட்டுமே பருவகால தொற்றுநோய்களுக்கு காரணமாகின்றன 1,5.

 

உலகளவில் காய்ச்சல் நோயானது பரவலாக இருக்கும் நோயாகும், இது 3-5 மில்லியன் பாதிப்புகள் கடுமையான நிகழ்வுகள் 1 உள்ளிட்ட ஆண்டுதோறும் சுமார் ஒரு பில்லியன் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் குறிப்பாக அதிக ஆபத்துள்ள குழுவினர்களிடையே 1,4 ஆண்டுதோறும் 290,000 முதல் 650,000 வரை சுவாசக் கோளாறு இறப்புகளை ஏற்படுத்துகிறது.

 

காய்ச்சல் யாரையும் பாதிக்கலாம் என்றாலும், சில குறிப்பிட்ட குழுவினர் அதிக ஆபத்தில் உள்ளனர்1,4:

 

  • கர்ப்பிணிப் பெண்கள்

  • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், குறிப்பாக 2 வயதுக்குட்பட்ட குழந்தைகள்

  • வயதானவர்கள்

  • நாள்பட்ட மருத்துவ நிலைமைகள் உள்ளவர்கள் (எ.கா., இதயம், நுரையீரல், சிறுநீரகம், வளர்சிதை மாற்ற, நரம்பு வளர்ச்சி, கல்லீரல் அல்லது இரத்தக் கோளாறுகள்)

  • நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுகள் அல்லது சிகிச்சைகள் உள்ள நபர்கள் (எ.கா., எச்.ஐ.வி, கீமோதெரபி, ஸ்டீராய்டுகள் அல்லது புற்றுநோய்)

  • அடிக்கடி நோயாளி தொடர்பு காரணமாக தொற்று மற்றும் வைரஸ் பரவுவதற்கான அதிக அபாயங்களை உடல்நல மற்றும் பராமரிப்பு ஊழியர்கள் எதிர்கொள்கின்றனர்.

     

காய்ச்சல் நோய் மற்றும் அதன் கடுமையான சிக்கல்களின் அபாயத்தைக் குறைப்பதற்கான ஒரு சிறந்த வழி ஒவ்வொரு ஆண்டும் காய்ச்சல் தடுப்பூசி போடுவதாகும் 1,3,4.

 

குழந்தைகள் மற்றும் வயது வந்தவர்களில் காய்ச்சல் அறிகுறிகளைக் கண்டறிதல்

protecting

கற்பனை படம், விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே

வைரஸுக்கு வெளிப்பட்டத்திலிருந்து அறிகுறிகள் தொடங்கும் வரையிலான காலமான இன்ஃப்ளூயன்ஸாவிற்கான அடைகாக்கும் காலம் பொதுவாக சுமார் 2 நாட்கள் ஆகும், ஆனால் 1 முதல் 4 நாட்கள் வரை இருக்கலாம். பொதுவாக பாதிக்கப்பட்ட நபருக்கு வெளிப்பட்ட 2 நாட்களுக்குப் பிறகு காய்ச்சல் அறிகுறிகள் தோன்றும் 1 என்று பொருள்படும்.

 

காய்ச்சல் அறிகுறிகள் எல்லா வயதினருக்கும் ஒரே மாதிரியானவை மற்றும் லேசானது முதல் கடுமையானது வரை மாறுபடும் 1,4. லேசான அறிகுறிகள் பொதுவாக திடீரென்று தோன்றும் மற்றும் பின்வருபவற்றை உள்ளடங்கியிருக்கலாம் 1,2:

 

  • திடீர் காய்ச்சல்

  • வறட்டு இருமல்

  • தொண்டை வலி

  • தலைவலி

  • மூக்கொழுகல் மூக்கடைப்பு

  • தசை மற்றும் மூட்டு வலிகள்

  • கடுமையான உடல்நலக்குறைவு (உடல்நிலை சரியில்லாதது போன்ற பொதுவான உணர்வு)

  • குளிர் நடுக்கங்கள்

  • களைப்பு அல்லது அசதி

  • வாந்தியெடுத்தல் மற்றும் வயிற்றுப்போக்கு (வயது வந்தவர்களை விட குழந்தைகளில் மிகவும் பொதுவானது)

     

ஃப்ளு உள்ள அனைவருக்கும் காய்ச்சல் வராது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்2, மேலும் இருமல் மிகவும் கடுமையானதாக இருக்கலாம், சில நேரங்களில் 2 வாரங்கள் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் 1.


கடுமையான காய்ச்சல் அறிகுறிகளை கண்டறிதல்

 

பெரும்பாலான மக்கள் ஒரு வாரத்திற்குள் காய்ச்சல் மற்றும் ஃப்ளு அறிகுறிகளிலிருந்து குணமடைவார்கள், ஆனால் சிலருக்கு உடனடி மருத்துவ கவனிப்பு தேவைப்படும் கடுமையான அறிகுறிகள் உருவாகலாம் 1.

 

கவனிக்க வேண்டிய கடுமையான காய்ச்சல் அறிகுறிகள் பின்வருமாறு -  

 

குழந்தைகளில் 2:

 

  • விரைவான மூச்சுவிடுதல் அல்லது சுவாசிப்பதில் சிரமம்

  • உதடுகள் அல்லது முகம் நீல நிறமாகுதல்

  • ஒவ்வொரு முறை மூச்சு விடும்போது விலா எலும்புகள் புடைத்தல்

  • மார்பு அசௌகரியம்

  • தீவிர தசை வலி (குழந்தை நடக்க மறுத்தல்)

  • நீரிழப்பு (8 மணி நேரம் சிறுநீர் இல்லை, வறண்ட வாய், அழும்போது கண்ணீர் வராமல் இருத்தல்)

  • விழித்திருக்கும் போது எதிர்வினையின்மை அல்லது ஈடுபாட்டின்மை

  • வலிப்புத்தாக்கங்கள்

  • மருந்து குடுத்தும் குறையாத 104°F க்கும் அதிகமான காய்ச்சல்

  • 12 வாரங்களுக்குட்பட்ட  குழந்தைகளுக்கு காய்ச்சல்

  • காய்ச்சல் அல்லது இருமல் ஆரம்பத்தில் குணமடைந்து பின்னர் மீண்டும் வருதல் அல்லது மோசமடைகிறது

  • முன்னதாக இருந்த மருத்துவ நிலைகளின் மோசமடைதல்

     

வயது வந்தவர்களில் 2:

 

  • சுவாசிப்பதில் சிரமம் அல்லது மூச்சுத் திணறல்

  • மார்பு அல்லது அடிவயிற்றில் தொடர்ந்து வலி அல்லது அழுத்தம்

  • தொடர்ச்சியான தலைச்சுற்றல், குழப்பம் அல்லது எழுந்திருப்பதில் சிரமம்

  • வலிப்புத்தாக்கங்கள்

  • சிறுநீர் கழித்தல் இல்லாமை

  • கடுமையான தசை வலி

  • தீவிர பலவீனம் அல்லது நிலையற்ற தன்மை

  • காய்ச்சல் அல்லது இருமல் ஆரம்பத்தில் குணமடைந்து பின்னர் மீண்டும் வருதல் அல்லது மோசமடைதல்

  • நாள்பட்ட மருத்துவ நிலைகளின் அதிகரிப்பு

     

இந்த அறிகுறிகளில் ஏதேனும் தோன்றினால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள், குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் அல்லது ஏற்கனவே உள்ள நோய்  நிலைமைகள் உள்ளவர்களுக்கு.

 

ஃப்ளு நோய்களில் உள்ள பிரச்சனைகள்

 

கடுமையான அறிகுறிகளுடன், சில நபர்கள் உயிருக்கு ஆபத்தான மற்றும் ஆபத்தான கடுமையான சிக்கல்களுக்கு அல்லது இறப்புக்கு கூட ஆளாக நேரிடும் 2. இந்த சிக்கல்கள் அதிக ஆபத்துள்ள நபர்களுக்கு அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது, இதில் பின்வருபவை உள்ளடங்கும் 2,1 :

 

  • சைனஸ் தொற்றுகள்

  • காது தொற்றுகள்

  • நிமோனியா.

  • உடலில் ஏற்படும் அதிகப்படியான அழற்சி, செப்சிஸுக்கு வழிவகுக்கிறது (தொற்றுக்கு உயிருக்கு ஆபத்தான எதிர்வினை).

  • இதய அழற்சி (மயோர்கார்டிடிஸ்)

  • மூளை அழற்சி (என்சிபாலிடிஸ்)

  • தசைகளின் அழற்சி (மயோசிடிஸ், ராப்டோமயோலிசிஸ்)

  • பல உறுப்பு செயலிழப்பு (எ.கா., சுவாசம் அல்லது சிறுநீரக செயலிழப்பு)

  • ஆஸ்துமா உள்ளவர்களில் ஆஸ்துமா தாக்குதல்கள்

  • நாள்பட்ட இதய நிலைமைகள் உள்ளவர்களில் இதய நோய் மோசமடைகிறது.

     

காய்ச்சல் நோயால் ஏற்படும் மரணம் முதன்மையாக அதிக ஆபத்துள்ள குழுவினர்களை பாதிக்கிறது. தொழில்மயமாக்கப்பட்ட நாடுகளில், பெரும்பாலான காய்ச்சல் தொடர்பான இறப்புகள் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் நிகழ்கின்றன. வளரும் நாடுகளில், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 99% காய்ச்சல் தொடர்பான இறப்புகள் குறைந்த சுவாச நோய்த்தொற்றுகளுடன் தொடர்புடையவை என்று ஆராய்ச்சி காட்டுகிறது 1.

 

ஃப்ளு தடுப்பூசியின் முக்கியத்துவம்

 

ஃப்ளு காய்ச்சல் தடுப்பூசி என்பது வயது வந்தவர்கள் மற்றும் குழந்தைகளை இன்ஃப்ளூயன்ஸா இலிருந்து பாதுகாக்க ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழியாகும்3 . நோயை ஏற்படுத்தாமல் வைரஸுக்கு எதிராக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டுவதன் மூலம் இது செயல்படுகிறது 6.  

 

ஃப்ளு தடுப்பூசி பெறுவது ஏன் முக்கியம் என்பதை இங்கே பார்க்கலாம்7:

 

  • ஃப்ளூ காய்ச்சல் தொடர்பான நோய்களைத் தடுக்கிறது.

  • மருத்துவரை சந்திக்க வேண்டிய அவசியத்தைக் குறைக்கிறது மற்றும் காய்ச்சல் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளைக் குறைக்கிறது.

  • கடுமையான காய்ச்சல் அறிகுறிகளின் அபாயத்தைக் குறைக்கிறது.

  • ICU சிகிச்சை தேவைப்படும் வாய்ப்பைக் குறைக்கிறது மற்றும் காய்ச்சல் தொடர்பான இறப்புகளைக் குறைக்கிறது.

  • காய்ச்சல் காரணமாக மருத்துவமனை சேர்ப்புகளைக் குறைக்கிறது.

  • நாள்பட்ட உடல்நல நிலைமைகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் முக்கியமானது, நாள்பட்ட நுரையீரல் நிலைமைகளை நிர்வகிக்க உதவுகிறது மற்றும் இதய நிகழ்வுகளைக் குறைக்கிறது.

  • கர்ப்ப காலத்தில் பெற்றோர்களாக ஆகபோகும் நபர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளை காய்ச்சலிலிருந்து பாதுகாக்கிறது.

  • கடுமையான காய்ச்சல் நிகழ்வுகள் மற்றும் மருத்துவமனை வருகைகளைக் குறைப்பதன் மூலம் குழந்தைகளின் உயிர் காக்கப்படும்.

     

பெற்றோருக்கு, ஹெபடைடிஸ் ஏ, சின்னம்மை, ரூபெல்லா மற்றும் பல போன்ற பிற முக்கிய தடுப்பூசிகளுடன் காய்ச்சல் தடுப்பூசியை உள்ளடக்கிய 7-star பாதுகாப்புத் திட்டத்தைக் கருத்தில் கொள்ளுங்கள். 7-star தடுப்பூசி அட்டவணையைப் பற்றி அறியவும், உங்கள் குழந்தை இந்த சாத்தியமான கடுமையான நோய்களிலிருந்து முழுமையாகப் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்யவும் ஒரு குழந்தை நல மருத்துவரை அணுகவும்.

 

இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் பரவுவதைக் குறைப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகள் 1,3:

 

  • சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளைத் தவறாமல் கழுவுங்கள்.

  • இருமும்போது மற்றும் தும்மும்போது உங்கள் முழங்கையால் அல்லது ஒரு டிஷ்யூ பேப்பரைப் பயன்படுத்தி வாயை மூடி, டிஷ்யூகளை முறையாக அப்புறப்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

  • நோய்வாய்ப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்.

  • உங்கள் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும்.

  • மேற்பரப்புகள் மற்றும் பொருட்களை சுத்தமாகவும் கிருமி நீக்கம் செய்யவும்.

  • பொது இடங்களில் முகக்கவசங்கள் அணிவது போன்ற நல்ல ஆரோக்கியத்தை கடைப்பிடிக்கவும்.

     

முடிவுரை

பருவகால ஃப்ளூ காய்ச்சல் என்பது யாரையும் பாதிக்கக்கூடிய ஒரு தொற்று சுவாச நோயாகும் 2, ஆனால் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்க பயனுள்ள வழிகள் உள்ளன 3.  

ஃப்ளு காய்ச்சல் தடுப்பூசி என்பது வயது வந்தவர்கள் மற்றும் குழந்தைகளை வைரஸால் பாதிக்கப்படும் சாத்தியமான சிக்கல்களிலிருந்து 1,3 பாதுகாக்க ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழியாகும். ஒவ்வொரு ஆண்டும் தடுப்பூசி போடுவதன் மூலம், உங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம் மற்றும் சமூகத்திற்குள் காய்ச்சல் பரவுவதைத் தடுக்க உதவலாம் 7.

இந்த காய்ச்சல் பருவத்தில் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள் - தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் மற்றும் உங்களைச் சுற்றியுள்ளவர்கள், குறிப்பாக அதிக ஆபத்துள்ள குழுவினர்களையும் அதையே செய்யுமாறு ஊக்குவிக்கவும்.

References

  1. Influenza (seasonal). (n.d.). Who.int. Retrieved September 11, 2024, from https://www.who.int/news-room/fact-sheets/detail/influenza-(seasonal)(2024i, July 29). Flu symptoms & complications
  2. Centers for Disease Control and Prevention.https://www.cdc.gov/flu/symptoms/symptoms.html
  3. CDC. (2025b, January 14). Preventing seasonal flu. Influenza (Flu). https://www.cdc.gov/flu/prevention/?CDC_AAref_Val=https://www.cdc.gov/flu/prevent/prevention.htm
  4. CDC. (2024c, June 5). About flu. Centers for Disease Control and Prevention.https://www.cdc.gov/flu/about/index.html
  5. CDC. (2024a, September 27). Types of influenza viruses. Influenza (Flu). https://www.cdc.gov/flu/about/viruses-types.html?CDC_AAref_Val=https://www.cdc.gov/flu/about/viruses/types.htm
  6. CDC. (2023, August 7). Explaining how vaccines work. Centers for Disease Control and Prevention.https://www.cdc.gov/vaccines/hcp/conversations/understanding-vacc-work.html
  7. CDC. (2025a, January 14). Benefits of the flu vaccine. Flu Vaccines Work. https://www.cdc.gov/flu-vaccines-work/benefits/index.html
     

CL Code: NP-IN-PVU-WCNT-240016 DoP Jan 2025

மேலும் படிக்கவும்

  • பொன்னுக்கு வீங்கி (மம்ஸ்) என்றால் என்னவென்று புரிந்துகொள்வதுடன் அதன் வெளிப்பாடுகளிலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது

    19-03-2025
    Read more »
  • கைக்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளில் இன்ஃப்ளூயன்ஸாவைத் தடுப்பது: ஒரு பெற்றோராக நீங்கள் என்ன செய்ய முடியும்?

    19-03-2025
    Read more »
  • குழந்தைகளில் சின்னம்மை தடுப்பு: அறிகுறிகள் மற்றும் வெரிசெல்லா தடுப்பூசி மூலம் பாதுகாப்பு

    12-03-2025
    Read more »