ஷிங்கிள்ஸ் (அக்கி) மற்றும் நீரிழிவு நோய்: தொடர்பு, தாக்கம் மற்றும் தடுப்பு

கற்பனை படம், விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே
நீரிழிவுடன் வாழ்வது என்பது அன்றாட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை பாதிக்கும் சவால்களை கொண்டது. இரத்த சர்க்கரை அளவை கையாள்வது, சிக்கலான கிரமமுறையுடன் மருந்து எடுத்துக்கொள்வது மற்றும் உணவு கட்டுப்பாடுகள் ஆகியவை நீரிழிவினால் பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் சில தடைகளாகும்.1
நீரிழிவை கையாள்வது சவாலானது என்றாலும், அதன் தாக்கம் அல்லது அது மற்ற நோய்களை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றி அறிந்துகொள்வதை நீங்கள் தவிர்க்கக்கூடாது.1
ஷிங்கிள்ஸ் (அக்கி) என்று பொதுவாக அழைக்கப்படும் ஹெர்பெஸ் ஜோஸ்டர் உருவாக்கும் அபாயத்தை நீரிழிவு அதிகரிப்பதாக மேலும் பல சான்றுகள் காட்டுகின்றன.2
இரண்டு நிலைகளுக்கும் அதன் தாக்கங்களுக்கும் இடையிலான தொடர்பையும் அதன் தாக்கங்களையும் தெரிந்துகொள்வோம்.
நீரிழிவு நோய் என்றால் என்ன?
நீரிழிவு நோய் என்பது ஒரு நாள்பட்ட உடல்நலக் கோளாறாகும். இது உங்கள் உடல் உணவை எவ்வாறு ஆற்றலாக மாற்றுகிறது என்பதை பாதிக்கிறது. போதுமான இன்சுலின் உற்பத்தி இல்லாததாலோ அல்லது இன்சுலினை திறம்பட பயன்படுத்த முடியாததாலோ ஏற்படும் அதிகரித்த இரத்த சர்க்கரை அளவு இதன் முக்கிய அம்சமாகும்.3,4
டைப் 1 நீரிழிவு நோய்
உடலின் பாதுகாப்பு அமைப்பானது தவறுதலாக தன்னைத்தானே தாக்கிக் கொள்ளும்போது இது நிகழ்கிறது. இது கட்டுப்படுத்தப்படாவிட்டால் இதய நோய், சிறுநீரக பிரச்சனைகள் மற்றும் கண்பார்வை பிரச்சினைகள் போன்ற கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தும். 4
டைப் 2 நீரிழிவு நோய்
இந்த நிலையில், உடலானது இன்சுலினை சரியாகப் பயன்படுத்துவதிலும் இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருப்பதிலும் சிக்கல் ஏற்படுகிறது. நீரிழிவுநோயால் பாதிக்கப்பட்ட பலருக்கு டைப் 2 நீரிழிவு உள்ளது. இது பொதுவாக மெதுவாகவே தொடங்குகிறது, பெரும்பாலும் பெரியவர்களிடம் காணப்படுகிறது, ஆனால் இப்போது குழந்தைகள், பதின்பருவத்தினர் மற்றும் இளைஞர்களுக்கும் இது ஏற்படலாம். 4

கற்பனை படம், விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே
நோயெதிர்ப்பு மண்டலத்தில் நீரிழிவு நோயின் விளைவுகள்
நீரிழிவு நோயாளிகளில் ஏற்படும் அதிகரித்த இரத்த சர்க்கரை (ஹைபர்கிளைசீமியா), நோயெதிர்ப்பு செயல்பாட்டில் சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, நீரிழிவு நோயாளிகளில் உட்செல்லும் நோய்க்கிருமிகளின் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் போகிறது.5
இதன் பொருள், நீரிழிவு நோய் உள்ள ஒருவரின் இரத்த சர்க்கரை அளவு மிக அதிகமாக (ஹைபர்கிளைசீமியா) இருக்கும்போது, அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலமானது சரியாக வேலை செய்யாமல் போகலாம்.
இதன் விளைவாக, நீரிழிவு நோயாளிகள் தொற்றுநோய்களுக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். 5
நீரிழிவு நோயானது எவ்வாறு உங்கள் அக்கி நோய் அபாயத்தை அதிகரிக்கிறது?
நீரிழிவு என்பது இரத்த நாளங்களுக்கு சேதம் ஏற்படுவதால் மூளை, சிறுநீரகங்கள், இதயம் மற்றும் கண்கள் போன்ற உறுப்புகளைப் பாதிக்கும் பல்வேறு நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் ஒரு நாள்பட்ட நிலையாகும். இதனால் தனிநபர்கள் தொற்றுநோய்களினால் மேலும் பாதிப்புக்குள்ளாகின்றனர்.5
பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலமானது அக்கி ஏற்படும் அபாயத்தை அதிகரிப்பதால், நீரிழிவு நோயாளி அதிக பாதிப்புக்குள்ளாகிறார். நீரிழிவு நோயானது ஹெர்பெஸ் ஜோஸ்டர் வரும் அபாயத்தை 40% வரை அதிகரிக்கிறது. 6,7
நீரிழிவு நோயாளிகளில் அக்கியின் தாக்கம்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஹெர்பெஸ் ஜோஸ்டர்குறிப்பிடத்தக்க சவால்களை ஏற்படுத்தக்கூடும்.2
- கிளைசெமிக் கட்டுப்பாட்டின் மீதான விளைவு: நீரிழிவு நோயாளிகளில் ஹெர்பெஸ் ஜோஸ்டர் கிளைசெமிக் கட்டுப்பாட்டை (உகந்த சீரம் குளுக்கோஸ் செறிவு) மோசமாக்கும்.8 ஒரு ஆய்வில், நன்கு கட்டுப்பாட்டில் இருந்த நீரிழிவு நோயாளிகளில் சுமார் 24% நபர்கள், ஹெர்பெஸ் ஜோஸ்டர் தொற்று ஏற்பட்ட பிறகு, எச்பிஏ1சி (சராசரி இரத்த சர்க்கரை அல்லது குளுக்கோஸ் அளவை அளவிடும் இரத்த பரிசோதனை) மூலம் அளவிடப்படும் அவர்களின் கிளைசெமிக் கட்டுப்பாட்டில் சரிவை அனுபவித்தனர்.8

கற்பனை படம், விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே
- சிக்கல்கள் மற்றும் தீவிரத்தன்மை: நீரிழிவு நோயானது நோய் எதிர்ப்பு சக்தியைப் பாதிப்பதால்5, அக்கியின் அறிகுறிகள் கடுமையாக இருக்கலாம்.2
நீரிழிவு மேலாண்மையில் குறுக்கீடு: அக்கி ஏற்பட்ட பிறகு தங்கள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் நீரிழிவு நோயாளிகள் சிரமத்தை அனுபவிக்கலாம். கூடுதலாக, இந்த நேரத்தில் பிற உடல்நலப் பிரச்சினைகளுக்காக அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.2
ஷிங்கிள்ஸ் (அக்கி) (ஹெர்பெஸ் ஜோஸ்டர்) என்றால் என்ன
ஹெர்பெஸ் ஜோஸ்டர் என்றும் அழைக்கப்படும் ஷிங்கிள்ஸ் (அக்கி) , கொப்புளங்களுடன் கூடிய வலிமிகுந்த தோல் சினப்பை ஏற்படுத்தும் ஒரு தொற்று ஆகும். வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் தான் அக்கியை ஏற்படுத்துகிறது, இதே வைரஸ் சின்னம்மையையும் ஏற்படுத்துகிறது. ஒருவருக்கு சின்னம்மை வந்து சென்ற பிறகு, வைரஸ் அவர்களின் உடலில் செயலற்ற நிலையில் இருக்கும், பிற்காலத்தில் மீண்டும்செயல்பெற்று அக்கி ஏற்படக் காரணமாகிறது.9
பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலமானது அக்கியின் அபாயத்தை அதிகரிக்கிறது, எனவே வயதானவர்களிடையே மிகவும் பொதுவானது, மேலும் இந்த நிலை உருவாகும் ஆபத்து வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது.10
இந்தியர் நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஒரு செரோபிரேவலன்ஸ் ஆய்வில், 50 வயதிற்குள், 90% க்கும் அதிகமானோருக்கு உடலில் வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் இருப்பதைக் கண்டறிந்தனர், இதனால் அவர்களுக்கு அக்கி ஏற்படும் ஆபத்து அதிகம்.11,12

கற்பனை படம், விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே
ஷிங்கிள்ஸ் (அக்கி) நோயின் அறிகுறி
சினப்பு ஏற்படுவதற்கு முன்பு, பாதிக்கப்பட்ட பகுதியில் வலி, அரிப்பு அல்லது கூச்ச உணர்வை இந்த நபர்கள் உணரலாம், இது பெரும்பாலும் பல நாட்களுக்கு முன்பே ஏற்படும். சிலருக்கு சினப்பு தோன்றுவதற்கு முன்பே காய்ச்சல் ஏற்படலாம்.13
பொதுவான அறிகுறிகள்:
பொதுவாக வலி மற்றும் நமைச்சல் உண்டாக்கும் சினப்பானது, 7 முதல் 10 நாட்களில் கொப்புளங்களாகவும் பின்னர் புண்களாகவும் மாறி, 2 முதல் 4 வாரங்களில் முழுமையாக குணமாகும்.13
சினப்பானது பொதுவாக உடலின் இடது அல்லது வலது பக்கத்தில் ஒற்றைக் கோட்டில் ஏற்படுகிறது.9
அக்கி சினப்பானது முகத்தின் ஒரு பக்கத்தில் ஏற்படலாம், இது கண்ணைப் பாதித்து பார்வை இழப்பை ஏற்படுத்தும்.13
மற்ற அறிகுறிகளில் பின்வருவன அடங்கும்13:
தலைவலி
- குளிர் நடுக்கம்
- வயறு உபாதை

கற்பனை படம், விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே
அக்கி தடுப்பு
தடுப்பூசியானது அக்கியைத் தடுக்க உதவலாம்.14 அக்கி தடுப்பூசியானது 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது வந்தவர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.15,16
References
- 10 Tips for coping with diabetes distress [Internet]. Cdc.gov. 2022 [cited 2023 Sep 11]. [Accessed 2023 Sep 11] Available at: https://www.cdc.gov/diabetes/managing/diabetes-distress/ten-tips-coping-diabetesdistress.html
- Papagianni M, Metallidis S, Tziomalos K. Herpes Zoster and Diabetes Mellitus: A Review. Diabetes Ther. 2018 Apr;9(2):545-550.
- CDC. What is diabetes? [Internet]. Centers for Disease Control and Prevention. 2023 [cited 2023 Sep 11]. [Accessed 2023 Sep 11] Available at: https://www.cdc.gov/diabetes/basics/diabetes.html
- Berbudi A, Rahmadika N, Tjahjadi AI, Ruslami R. Type 2 Diabetes and its Impact on the Immune System. Curr Diabetes Rev. 2020;16(5):442-449.
- Batram M, Witte J, Schwarz M, Hain J, et al. Burden of Herpes Zoster in Adult Patients with Underlying Conditions: Analysis of German Claims Data, 2007-2018. Dermatol Ther (Heidelb). 2021 Jun;11(3):1009-1026.
- Marra F et al. Open Forum Infect Dis. 2020;7:1-8.
- Huang CT, Lee CY, Sung HY, et al. Association Between Diabetes Mellitus and the Risk of Herpes Zoster: A Systematic Review and Meta-analysis. J Clin Endocrinol Metab. 2022 Jan 18;107(2):586-597.
- Muñoz-Quiles C, López-Lacort M, Ampudia-Blasco FJ, Díez-Domingo J. Risk and impact of herpes zoster on patients with diabetes: A population-based study, 2009–2014. Hum Vaccin Immunother [Internet]. 2017 [cited 2023 Sep 11];13(11):2606–11. [Accessed 2023 Sep 11] Available at: https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC5798425/
- Clinical overview [Internet]. Cdc.gov. 2023 [cited 2023 Sep 11]. [Accessed 2023 Sep 11] Available at: https://www.cdc.gov/shingles/hcp/clinical-overview.html
- Five things you should know about shingles [Internet]. Cdc.gov. 2023 [cited 2023 Sep 11]. [Accessed 2023 Sep 11] Available at: https://www.cdc.gov/shingles/5-things-you-should-know.html
- Lokeshwar MR, Agrawal A, Subbarao SD, Chakraborty MS, Av RP, Weil J, et al. Age related seroprevalence of antibodies to varicella in India. Indian Pediatr [Internet]. 2000 [cited 2023 Sep 11];37(7). [Accessed 2023 Sep 11] Available at: https://pubmed.ncbi.nlm.nih.gov/10906803/
- GSK launches Shingrix in India- A vaccine for the prevention of shingles in adults aged 50 years and above [Internet]. Gsk.com. 2023 [cited 2023 Sep 11]. [Accessed 2023 Sep 11] Available at: https://india-pharma.gsk.com/en-in/media/press-releases/gsk-launches-shingrix-in-india-a-vaccine-for-the-prevention-of-shingles-in-adults-aged-50-years-and-above/
- Signs and symptoms [Internet]. Cdc.gov. 2023 [cited 2023 Sep 11]. [Accessed 2023 Sep 11] Available at: https://www.cdc.gov/shingles/about/symptoms.html
- Prevention and treatment [Internet]. Cdc.gov. 2023 [cited 2023 Sep 11]. [Accessed 2023 Sep 11] Available at: https://cdc.gov/shingles/about/treatment.html
- CDC. Shingles vaccination [Internet]. Centers for Disease Control and Prevention. 2023 [cited 2023 Sep 11]. [Accessed 2023 Sep 11] Available at: https://www.cdc.gov/vaccines/vpd/shingles/public/shingrix/index.html
- Adult immunization schedule – healthcare providers [Internet]. Cdc.gov. 2023 [cited 2023 Sep 11]. [Accessed 2023 Sep 11] Available at: https://www.cdc.gov/vaccines/schedules/hcp/imz/adult.html
CL Code: NP-IN-HZU-WCNT-230018 DoP: Sep 2023
மேலும் படிக்கவும்
-
இருதய நோய்கள் மற்றும் ஷிங்கிள்ஸ் (அக்கி): அவற்றின் தொடர்பு மற்றும் தாக்கத்தைப் புரிந்துகொள்வது
19-03-2025Read more »
-
ஷிங்கிள்ஸ் (அக்கி) அரிப்பு மற்றும் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது: நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்
19-03-2025Read more »
-
நுரையீரல் நோய் உள்ள நோயாளிகளில் ஷிங்கிள்ஸ்: ஆஸ்துமா மற்றும் சிஓபிடி இன் தாக்கம்
19-03-2025Read more »
-
ஷிங்கிள்ஸ் (அக்கி) நோய் மற்றும் அறிகுறிகள்: நோய்க்குறிகள் மற்றும் தடுப்பு குறித்த முழுமையான கண்ணோட்டம்
19-03-2025Read more »