ஷிங்கிள்ஸ் (அக்கி) நோய் மற்றும் அறிகுறிகள்: நோய்க்குறிகள் மற்றும் தடுப்பு குறித்த முழுமையான கண்ணோட்டம்

கற்பனை படம், விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே
3 நபர்களில்1 1 நபருக்கு தனது வாழ்நாளில் ஷிங்கிள்ஸ் ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஷிங்கிள்ஸ் நோய் என்பது, வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் (சின்னம்மையை ஏற்படுத்தும் அதே வைரஸ்) மீண்டும் செயல்படுவதால் ஏற்படும் வலிமிகுந்த மற்றும் பெரும்பாலும் பலவீனப்படுத்தும் நோய் நிலையாகும், குறிப்பாக வயதானவர்களுக்கும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நாள்பட்ட நோய் நிலைமைகள் உள்ளவர்களுக்கும் குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்களை ஏற்படுத்துகிறது. அதன் பரவல் இருந்தபோதிலும், பலர் ஷிங்கிள்ஸுடன் தொடர்புடைய அபாயங்கள் மற்றும் அதைத் தடுக்க அவர்கள் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் பற்றி அறியாமல் உள்ளனர். இந்த விரிவான கண்ணோட்டத்தில், நோய்க்கான காரணங்கள், கவனிக்க வேண்டிய அறிகுறிகள், சாத்தியமான சிக்கல்கள் மற்றும் உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகளை ஆராய்வதன் மூலம் ஷிங்கிள்ஸைப் பற்றி விவாதிப்போம்.
உங்களுக்கு ஷிங்கிள்ஸ் நோய் இருந்திருந்தாலோ, நோய் உள்ள யாரையாவது அறிந்திருந்தாலும், அல்லது வெறுமனே தகவல் பெற விரும்பினாலும், இந்த கண்ணோட்டம் உங்களுக்குத் தேவையான தகவலை அளிக்கும்.
நோய், அபாயங்கள், அறிகுறிகள் மற்றும் சிக்கல்களைப் புரிந்துகொள்ள உங்கள் மருத்துவரை அணுக வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஷிங்கிள்ஸ் பற்றிய கண்ணோட்டம்
மருத்துவ ரீதியாக ஹெர்பெஸ் ஜோஸ்டர் என்றும் அழைக்கப்படும் ஷிங்கிள்ஸ் நோயானது, வெரிசெல்லா-ஜோஸ்டர்2 என்ற வைரஸ் மீண்டும் செயல்படுவதால் ஏற்படும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். சின்னம்மைக்கு காரணமான இந்த வைரஸ், முதன்மை தொற்றுக்குப் பிறகு நரம்பு மண்டலத்தில் செயல்படாத நிலையில் அல்லது செயலற்ற நிலையில் உள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, அது மீண்டும் செயலூக்கம் அடைந்து, இதனால் ஒரு சிறப்பியல்பு கொண்ட வலிமிகுந்த சினப்பாக ஏற்படலாம்2.
ஷிங்கிள்ஸ் சினப்பானது உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றலாம், ஆனால் பெரும்பாலும் கொப்புளங்களின் ஒற்றைக் கோடாக, பொதுவாக உடல், கழுத்து அல்லது முகத்தின் இடது அல்லது வலது பக்கத்தைச் சுற்றி ஏற்படுகிறது. உயிருக்கு ஆபத்தானதாக இல்லாவிட்டாலும், ஹெர்பெஸ் ஜோஸ்டர் அதிக அசௌகரியத்தை அளிக்கலாம். பெரும்பாலான பாதிப்படைந்தவர்களுக்கு 2-4 வாரங்களுக்குள் சரியாகிவிடும்4.
சில சந்தர்ப்பங்களில், ஷிங்கிள்ஸ் போஸ்ட்ஹெர்பெடிக் நியூரால்ஜியா (பீஎச்என்) க்கு வழிவகுக்கலாம் - இது ஷிங்கிள்ஸ் சினப்பு குணமடைந்த பிறகும் தொடர்ந்து வலியால் வகைப்படுத்தப்படும் ஒரு நாள்பட்ட நோய் நிலையாகும்5.

கற்பனை படம், விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே
ஷிங்கிள்ஸ் வைரஸ் என்றால் என்ன?
வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் (வி.இசட்.வி) ஆனது சின்னம்மை (வெரிசெல்லா) மற்றும் சிங்கிள்ஸை ஏற்படுத்தும். சின்னம்மை நோயானது ஒரு அரிப்பு சினப்பாகத் தோன்றும், இது சிறிய புடைப்புகள் மற்றும் கொப்புளங்களுடன் தொடங்கி இறுதியில் 7 முதல் 10 நாட்களுக்குள் உலர்ந்த மேலோடுகளாக (சிரங்குகள்) உருவாகிறது4. சின்னம்மை குணமடைந்த பிறகு, வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரசானது செயலற்ற நிலையில் நரம்புகளில் இருக்கும். மீண்டும் செயலூக்கம் அடைந்தால், அது ஷிங்கில்ஸ் சினப்பிற்கு வழிவகுக்கிறது. இந்த சினப்பானது போஸ்ட்ஹெர்பெடிக் நியூரால்ஜியா எனப்படும் தொடர்ச்சியான நரம்பு வலிக்கும் வழிவகுக்கலாம் . போஸ்ட்ஹெர்பெடிக் நியூரால்ஜியா ஷிங்கிள்ஸால் பாதிக்கப்பட்ட 4 நபர்களில் 1 நபரை பாதிக்கலாம்5.
ஷிங்கிள்ஸ் நோயானது ஹெர்பெஸ் ஜோஸ்டர் என்று குறிப்பிடப்பட்டாலும், வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரசானது சளி புண்கள் அல்லது பிறப்புறுப்பு ஹெர்பெஸை ஏற்படுத்தும் வைரஸ்களிலிருந்து வேறுபடுகிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும்.
அதாவது, ஷிங்கிள்ஸ் நோய் பாலியல் ரீதியாக பரவும் தொற்று அல்ல6.
ஷிங்கிள்ஸ் நோயின் அறிகுறிகள் யாவை?
ஷிங்கிள்ஸ் தொடக்க கால அறிகுறிகளாவன தாங்க முடியாத வலி மற்றும் எரியும் உணர்வு4.
ஷிங்கிள்ஸ் சினப்பு தோன்றும்போது, அது பொதுவாக உடலின் ஒரு பக்கத்தில், இடது அல்லது வலதுபுறத்தில் சுற்றி கொப்புளங்களின் பட்டைகளை உருவாக்குகிறது. மற்ற சந்தர்ப்பங்களில், சினப்பானது ஒரு கண்ணைச் சுற்றி அல்லது கழுத்து அல்லது முகத்தின் ஒரு பக்கத்தில் ஏற்படலாம்4.
ஷிங்கிள்ஸ் நோயின் பிற அறிகுறிகளில் பின்வருபவை உள்ளடக்கியிருக்கலாம்6:
- அரிப்பு
- தோலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் கூச்ச உணர்வு அல்லது எரியும் உணர்வு
- ஷிங்கிள்ஸ் வலிக்கு சில நாட்களுக்குப் பிறகு தோன்றும் ஒரு சினப்பு
- திரவம் நிரம்பிய கொப்புளங்கள் 7-10 நாட்களில் வெடித்து சிரங்குகளை உருவாக்குகின்றன.
- சோர்வு
- தலைவலி
- வெளிச்சம் அல்லது தொடுதலுக்கு உணர்திறன்
- காய்ச்சல்
- வயிற்றுபோக்கு
- குளிர் நடுக்கங்கள்
- தசை பலவீனம்

கற்பனை படம், விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே
ஷிங்கிள்ஸ் நோய் வருவதற்கான காரணம் என்ன?
ஷிங்கிள்ஸ் நோயானது வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸால் (சின்னம்மை ஏற்படக் காரணமானது) தூண்டப்படுகிறது. ஒருவருக்கு சின்னம்மை வந்த பிறகு, வைரசானது பல ஆண்டுகளாக செயலற்ற நிலையில் நரம்பு மண்டலத்தில் இருக்கும்2.
ஷிங்கிள்ஸ் வைரஸ் மீண்டும் செயல்படுவதற்கான சரியான காரணம் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படவில்லை, ஆனால் இது பெரும்பாலும் நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமடையும் போது ஏற்படுகிறது, இது இயற்கையாகவே வயதுக்கு ஏற்ப அல்லது நோய்கள் மற்றும் மருந்துகள் காரணமாக நிகழலாம்9. நோயெதிர்ப்பு மண்டலம் பாதிக்கப்படும்போது, வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் மீண்டும் செயலூக்கம் பெற்று, நரம்பு பாதைகளில் பயணித்து, தோலில் வலிமிகுந்த சினப்பை ஏற்படுத்தும். சின்னம்மை வந்து போனதால் ஷிங்கிள்ஸ் அபாயத்தை அதிகரிக்கிறது என்றாலும், அதில் எந்த உத்திரவாதமும் இல்லை.
உங்களுக்கு ஷிங்கிள்ஸ் இருந்தால், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாத ஒருவருக்கு உங்கள் மூலமாக வைரஸ் கடந்து சின்னம்மையை உருவாக்கலாம். பொதுவாக, ஷிங்கிள்ஸ் சினப்பின் திறந்திருக்கும் புண்களுடன் நேரடி தொடர்பு மூலம் பரவுகிறது. இருப்பினும், வைரஸ் பரவினால், அந்த நபருக்கு ஷிங்கிள்ஸ் நோய் ஏற்படாது ஆனால் சின்னம்மை ஏற்படும்7.
ஷிங்கிள்ஸ் நோய் எவ்வளவு பொதுவானது?
இந்தியாவில் ஷிங்கிள்ஸ் நோய் ஒரு பொதுவான பிரச்சினையாகும், 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கே இது பெரும்பாலும் ஏற்படுகிறது1. சின்னம்மை வந்த எவருக்கும் பிற்காலத்தில் ஷிங்கிள்ஸ் ஏற்படும் அபாயம் உள்ளது2.
ஷிங்கிள்ஸ் வரும் அபாயம் யாருக்கு உள்ளது?
உங்களுக்கு ஷிங்கிள்ஸ் நோய் வரும் அபாயத்தை அதிகரிக்கும் சில காரணிகள் இங்கே வழங்கப்பட்டுள்ளது:
முன்னதாக சின்னம்மை வந்திருத்தல்2
குடும்பத்தில் எவருக்கேனும் ஷிங்கிள்ஸ் நோய் இருப்பது3
நீங்கள் வயதாகும்போது, குறிப்பாக 50 வயதுக்குப்1 பிறகு ஷிங்கிள்ஸ் நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகமாகும்.
புற்றுநோய்3, நீரிழிவு நோய்(10) மற்றும் தன்னுடல் தடுப்பாற்று நோய்கள்3 போன்ற சில மருத்துவ நோய்நிலைமைகள் உங்கள் உடலின் பாதுகாப்பை (நோய் எதிர்ப்பு மண்டலத்தை) பலவீனப்படுத்தலாம், இதனால் உங்களுக்கு ஷிங்கிள்ஸ் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும்.
ஸ்டீராய்டுகளை நீண்ட காலமாகப் பயன்படுத்துவது ஹெர்பெஸ் ஜோஸ்டர் உருவாகும் வாய்ப்புகளை அதிகரிக்கும்9.
நாள்பட்ட மன அழுத்தம் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தக்கூடும், மேலும் அது ஷிங்கிள்ஸுக்குக் காரணமாகவும் இருக்கலாம்3.

கற்பனை படம், விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே
ஷிங்கிள்ஸில் உள்ள சில சிக்கல்கள் யாவை?

கற்பனை படம், விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே
தடிப்புகள் மறைந்த பிறகும், சிலர் போஸ்ட்ஹெர்பெடிக் நியூரால்ஜியா எனப்படும் தொடர்ச்சியான ஷிங்கிள்ஸ் வலியை அனுபவிக்கிறார்கள். சேதமடைந்த நரம்புகள் மூளைக்கு கலப்பு சமிக்ஞைகளை அனுப்பும்போது இது நிகழ்கிறது, இது தீவிரமான மற்றும் நீண்டகால வலியை ஏற்படுத்துகிறது. போஸ்ட்ஹெர்பெடிக் நியூரால்ஜியா பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட நீடிக்கும், இது வாழ்க்கைத் தரத்தை கணிசமாக பாதிக்கிறது5.
50 வயதுக்கு மேற்பட்ட 4 நபர்களில் 1 நபருக்கு ஷிங்கிள்ஸ் ஏற்பட்டால் போஸ்ட்ஹெர்பெடிக் நியூரால்ஜியா உருவாகும்5. சிலருக்கு இது ஏன் ஏற்படுகிறது, மற்றவர்களுக்கு ஏன் ஏற்படுவதில்லை என்பதற்கான காரணம் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இது அதிகரித்த நரம்பு உணர்திறன் அல்லது மத்திய நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் வைரஸ் காரணமாக இருக்கலாம்10.
ஹெர்பெஸ் ஜோஸ்டரின் பிற சிக்கல்கள் பின்வருமாறு:
ஹெர்பெஸ் ஜோஸ்டர் ஆப்தால்மிகஸ் (எச்இசட்ஓ) தோராயமாக 4 ஷிங்கிள்ஸ் நோயாளிகளில் 1 நபருக்கு ஏற்படுகிறது. எச்இசட்ஓ உள்ளவர்களில் பாதி பேர் வரை வலிமிகுந்த கண் தொற்று மற்றும் நிரந்தர பார்வை சேதம் போன்ற கண் சிக்கல்களை உருவாக்கலாம்10.
ஷிங்கிள்ஸால் பாதிக்கப்பட்ட நபர்கள் மூளை அழற்சியை (என்செபாலிடிஸ்) அனுபவிக்கலாம், இது தலைவலி, காய்ச்சல், குழப்பம் மற்றும் வலிப்பு போன்ற அறிகுறிகளால் வகைப்படுத்தப்படுகிறது11.
ஷிங்கிள்ஸ் முக நரம்புகளையும் பாதிக்கலாம், இதனால் பலவீனம் அல்லது முக முடக்குவாதம் ஏற்படலாம் (ராம்சே ஹன்ட் சின்ரோம்)12.
ஷிங்கிள்ஸ் நோயானது கேட்கும் திறன் மற்றும் சமநிலையைக் கட்டுப்படுத்தும் நரம்புகளைப் பாதிக்கலாம், இதன் விளைவாக கேட்கும் திறன் இழப்பு, டின்னிடஸ் (காதுகளில் சத்தம்), கிறுகிறுப்பு மற்றும் தலைச்சுற்றல் ஆகியவை ஏற்படும். ஷிங்கிள்ஸ் உள்ளவர்களில் சமநிலைப் பிரச்சினைகளும் உருவாகலாம்12.
ஷிங்கிள்ஸ் நோய் எவ்வாறு கண்டறியப்படுகிறது?
மருத்துவர்கள் பொதுவாக அறிகுறிகள் மற்றும் மருத்துவ வரலாற்றைப் புரிந்துகொள்வதன் மூலம் ஷிங்கிள்ஸைக் கண்டறிகிறார்கள். ஷிங்கிள்ஸின் விஷயத்தில், உடலின் ஒரு பக்கத்தில் கொப்புளங்களின் தனித்துவமான பட்டை போன்று, சினப்பு மற்றும் கொப்புளங்கள் இருப்பது நோயைக் கண்டறிய உதவும். நோயறிதல் நிச்சயமற்றதாக இருந்தால் அல்லது சினப்பு வித்தியாசமானதாக இருந்தால், கொப்புளத்திலிருந்து ஒரு மாதிரி எடுக்கப்பட்டு வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் (விஇசட்வி) உள்ளதா என்பது சோதிக்கப்படுகிறது13.
ஷிங்கிள்ஸை எவ்வாறு தடுப்பது?
ஷிங்கிள்ஸ் தாங்க முடியாத அளவுக்கு வலியை ஏற்படுத்தும்15# ஷிங்கிள்ஸ் நோயின் அறிகுறிகள் கடுமையாக இருக்கலாம், ஆனால் தடுப்பூசி ஷிங்கிள்ஸைத் தடுக்க உதவும்14. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இதனால் ஷிங்கிள்ஸ் வைரஸை எதிர்த்துப் போராடி அதை மீண்டும் செயல்படவிடாமல் தடுக்கலாம்14.
50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெரியவர்கள் இந்த நோயைப் புரிந்துகொள்ள மருத்துவரை அணுக வேண்டும் மற்றும் கடுமையான அறிகுறிகள் மற்றும் ஷிங்கிள்ஸுடன் தொடர்புடைய சிக்கல்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மூலம் தடுப்பது பற்றி விவாதிக்க வேண்டும்.
முடிவுரை
ஷிங்கிள்ஸ் அல்லது ஹெர்பெஸ் ஜோஸ்டர் என்பது வலிமிகுந்த வைரஸ் தொற்று ஆகும், இது முந்தைய சின்னம்மை1 நோயிலிருந்து தோன்றலாம். உயிருக்கு ஆபத்தானதாக இல்லாவிட்டாலும், ஷிங்கிள்ஸ் குறிப்பிடத்தக்க அசௌகரியத்தை ஏற்படுத்தும் மற்றும் நீண்டகால சிக்கல்களுக்கு வழிவகுக்கும். உங்களுக்கு சின்னம்மை இருந்தால், பிற்காலத்தில் சின்னம்மை வைரஸ் ஆனது மறுசெயலூக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது. அதிர்ஷ்டவசமாக, தடுப்பூசி மூலம் ஷிங்கிள்ஸைத் தடுக்கலாம்2.
ஷிங்கிள்ஸ், அதன் அபாயங்கள் மற்றும் ஷிங்கிள்ஸிலிருந்து உங்களை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பதைப் புரிந்துகொள்ள உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (எஃப்ஏகியூ-கள்)
1. ஷிங்கிள்ஸ் சினப்பு நோய் பரவக்கூடுமா?
ஷிங்கிள்ஸ் சினப்பு நோயானது நேரடியாக ஷிங்கிள்ஸைப் பரப்பாது, ஆனால் சினப்பில் திரவத்தில் உள்ள வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ், அதை கொண்டிருக்காதவர்களுக்கு அல்லது தடுப்பூசி போடாதவர்களுக்கு சின்னம்மையை பரவச் செய்யும்7.
2. உங்களுக்கு சின்னம்மை நோய் ஏற்படாமல் ஷிங்கிள்ஸ் நோய் வர வாய்ப்புள்ளதா?
உங்களுக்கு சின்னம்மை ஏற்பட்டதில்லை மற்றும் ஷிங்கிள்ஸ் உள்ள ஒருவரின் கசிவு, கொப்புளம் போன்ற சினப்புடன் நேரடி தொடர்பு ஏற்பட்டால், நீங்கள் வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸால் பாதிக்கப்பட்டு சின்னம்மை நோய் ஏற்படலாம். உங்களுக்கு சின்னம்மை வந்து குணமடைந்த பிறகு, வைரஸ் ஆனது உங்கள் நரம்பு திசுக்களில் செயலற்ற நிலையில் இருக்கும், மேலும் வாழ்நாளில் பின்னொரு காலத்தில் அது சிங்கிள்ஸ் ஆக மீண்டும் செயல்படலாம்7.
3. தோலின் எந்தப் பகுதியிலும் ஷிங்கிள்ஸ் உருவாகுமா?
ஆம், தோலின் எந்தப் பகுதியிலும் ஷிங்கிள்ஸ் தோன்றலாம். இருப்பினும், இது பொதுவாக ஒரு குறிப்பிட்ட நரம்பு பாதையைப் பின்பற்றுகிறது, பெரும்பாலும் உடல் அல்லது முகத்தின் ஒரு பக்கத்தில் ஒரு பட்டை அல்லது திட்டாகத் தோன்றும்9
4. ஷிங்கிள்ஸ் வலிமிகுந்ததா
ஆம், பெரும்பாலான மக்களுக்கு ஷிங்கிள்ஸ் தாங்க முடியாத வலியை ஏற்படுத்துகிறது15#. இது பொதுவாக பாதிக்கப்பட்ட பகுதியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வலியை ஏற்படுத்துகிறது, இது நகங்கள் துளைத்தல், மின்சார அதிர்ச்சி அல்லது தாங்க முடியாத எரிதல் போன்ற உணர்வை ஏற்படுத்தும்6#. ஷிங்கிள்ஸ் வலியின் தீவிரம் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள தோல் பொதுவாக தொடு வலியை கொண்டிருக்கும்.
ஷிங்கிள்ஸ் வலி பொதுவாக பின்வரும் பாகங்களில்4 இல் உள்ள நரம்புகளைப் பாதிக்கிறது:
முகம்
மார்பு
கழுத்துck
கீழ் முதுகு
அடிவயிறு
ஷிங்கிள்ஸ் வலி குறித்து உங்கள் மருத்துவரிடம் விவாதித்து ஆலோசனை பெறுவதும், ஏற்படக்கூடிய எந்தவொரு சிக்கல்களையும் தவிர்ப்பதும் முக்கியம்.
5. ஷிங்கிள்ஸ் ஆபத்தானதாக இருக்குமா?
ஆம், கீழே உள்ளதைப் போன்ற நீண்டகால விளைவுகளால் ஷிங்கிள்ஸின் சிக்கல்கள் ஆபத்தானவை.
மிகவும் பொதுவான சிக்கல் போஸ்டெர்பெடிக் நியூரால்ஜியா (பீஎச்என்) ஆகும், இதில் ஒரு தொடர்ச்சியான வலி நரம்பு வலி ஏற்படுகிறது, இது சினப்பு குணமடைந்த பிறகும் ஒரு மாதத்திற்கு மேல் நீடிக்கும் ஷிங்கிள்ஸுடன் அனுபவிக்கப்படுகிறது. 6
முகத்தில் ஷிங்கிள்ஸ் ஏற்பட்டால், அது கண்ணுக்கு பரவி பார்வை இழப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கலாம். இது ஹெர்பெஸ் ஜோஸ்டர் ஆப்தால்மிகஸ் என்று அழைக்கப்படுகிறது6
மற்ற அரிய சிக்கல்களில் காது கேட்கும் பிரச்சினைகள், முகத்தின் பக்கவாட்டில் உள்ள தசைகள் பலவீனமடைதல், மூளைக்காய்ச்சல், நிமோனியா அல்லது ஒரு தன்னுடல் தடுப்பாற்று எதிர்வினையைத் தூண்டுதல் ஆகியவை உள்ளடங்கும்6.
References
- Harpaz R et al. MMWR Recomm Rep. 2008 Jun 6;57(RR-5):1-30.
- Weaver BA. J Am Osteopath Assoc. 2009;109(6 Suppl 2):S2
- Marra F et al. Open Forum Infect Dis. 2020;7:1-8.
- CDC. (2024, May 14). Shingles symptoms and complications. Shingles (Herpes Zoster). https://www.cdc.gov/shingles/signs-symptoms/index.html Accessed July 2024
- Zoster vaccines for Australian adults. NCIRS.2022;1-17.
- eMedicineHealth; 2021; 1-69; Shingles Treatment, Causes, Pictures & Symptoms Shingles Treatment, Pictures, Symptoms, Vaccine (emedicinehealth.com) Accessed July 2024
- CDC. (2024, May 14). Causes and Spread (Herpes Zoster). About Shingles (Herpes Zoster) | Shingles (Herpes Zoster) | CDC Accessed Feb 2025
- Huang CT, et al. J Clin Endocrinol Metab. 2022 Jan 18;107(2):586-597.
- CDC About Shingles (Herpes Zoster) https://www.cdc.gov/shingles/about/index.html Accessed July 2024
- Kedar S et al. Journal of Neuro-Opthalmology;2019;39;220-231.
- Espiritu R et al. Infectious Disease in Clinical Practice;2007;15;284-288.
- Crouch AE. NCBI Bookshelf;2022;1-12- Intro (p.1)
- Shingles (herpes zoster) Shingles (herpes zoster)
- CDC Shingles (Herpes Zoster) Vaccination. Available from https://www.cdc.gov/shingles/vaccination.html Accessed Feb 2025.
- CDC Shingles (Herpes Zoster) Complications. Available at: https://www.cdc.gov/shingles/about/complications.html Accessed July 2024
- AAD https://www.aad.org/public/diseases/a-z/shingles-symptoms Accressed July 2024
- American Academy of Dermatology Association | Shingles: Diagnosis and treatment https://www.aad.org/public/diseases/a-z/shingles-treatment Accessed February 2025.
Cl code: NP-IN-HZU-WCNT-240002 Dop: February 2025
மேலும் படிக்கவும்
-
இருதய நோய்கள் மற்றும் ஷிங்கிள்ஸ் (அக்கி): அவற்றின் தொடர்பு மற்றும் தாக்கத்தைப் புரிந்துகொள்வது
19-03-2025Read more »
-
ஷிங்கிள்ஸ் (அக்கி) அரிப்பு மற்றும் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது: நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்
19-03-2025Read more »
-
நுரையீரல் நோய் உள்ள நோயாளிகளில் ஷிங்கிள்ஸ்: ஆஸ்துமா மற்றும் சிஓபிடி இன் தாக்கம்
19-03-2025Read more »