பொன்னுக்கு வீங்கி (மம்ஸ்) என்றால் என்னவென்று புரிந்துகொள்வதுடன் அதன் வெளிப்பாடுகளிலிருந்து குழந்தைகளை எவ்வாறு பாதுகாப்பது

கற்பனை படம், விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே
தொற்று வைரஸ் நோயான1 பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்), குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்சினையாக இருக்கலாம்1. தடுப்பூசி 2 மூலம் தடுக்கக்கூடியதாக இருந்தாலும், குறிப்பாக குறைந்த தடுப்பூசி விகிதங்களைக் கொண்ட சமூகங்களில் 3 நோய்த்தொற்றுகள் தொடர்ந்து இருக்கிறது.1,3,
உண்மையில், பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) நோய் உலகளவில் பரவலாக உள்ளது 3, உலக சுகாதார அமைப்பில் (WHO) ஆண்டுதோறும் சராசரியாக 500,000 நோய் நிகழ்வுகள் பதிவாகின்றன.
இந்த வலைப்பதிவு இடுகையில் பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்)-இன் காரணங்கள், அறிகுறிகள், சிக்கல்கள் மற்றும் மிக முக்கியமாக, உங்கள் குழந்தையை சாத்தியமான நோய்தொற்றுகளிலிருந்து எவ்வாறு பாதுகாப்பது உள்ளிட்ட விவரங்களை பற்றி விவாதிக்கப்படும்.
பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) நோய் என்பது என்ன?
தொற்றுநோய் பரோடிடிஸ் 4 என்றும் அழைக்கப்படும் பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) நோயானது, மம்ப்ஸ் வைரஸ் 1,5 ஆல் ஏற்படும் ஒரு தொற்று வைரஸ் தொற்று ஆகும். இது முதன்மையாக உமிழ்நீர் சுரப்பிகளை, குறிப்பாக காதுகளுக்கு அருகில், கன்னம் மற்றும் தாடை பகுதியில் உள்ள பரோடிட் சுரப்பிகளை, 1,5 பாதிக்கிறது.
இந்த தொற்று பொதுவாக இந்த சுரப்பிகளில் ஒன்று அல்லது இரண்டிலும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது, இதன் விளைவாக வீங்கிய கன்னங்கள் மற்றும் வீங்கிய, வலிமிகுந்த தாடை 1,5 ஏற்படுகிறது. வீக்கம் பொதுவாக 1 முதல் 3 நாட்களுக்குள் உச்சத்தை எட்டும், பின்னர் அடுத்த வாரத்தில் குறையும் 5. பெரும்பாலான நபர்கள் லேசான அறிகுறிகளை அனுபவித்து 2 வாரங்களுக்குள் முழுமையாக குணமடைவார்கள் 1.
இருப்பினும், பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) நோய் மூளைக்காய்ச்சல் (மூளை திசுக்களின் அழற்சி), காது கேளாமை, என்செபலிடிஸ் (மூளையில் அழற்சி), வைரஸ் நிமோனியா மற்றும் ரத்தக்கசிவு நிலைமைகள் (அதிகப்படியான இரத்தப்போக்கு) உள்ளிட்ட கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும் 1,5.
தடுப்பூசி போடப்படாத 2 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளில் பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) நோய் பொதுவாக ஏற்படுகிறது, ஆனால் இது எவரையும் பாதிக்கலாம் 6. சமீபத்திய ஆண்டுகளில், இந்த நோய்த்தொற்றுகள் வளர் இளம் பருவத்தினர் மற்றும் இளைஞர்களிடையே அதிகமாகக் காணப்படுகின்றன 4.
பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) நோயின் காரணங்கள்
பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) என்பது மம்ப்ஸ் வைரஸ் மூலம் ஏற்படும் ஒரு நோயாகும்1. இந்த வைரஸ் பரமிக்சோவிரிடே வகை மற்றும் ரூபுலாவைரஸ் இனத்தைச் சேர்ந்தது 3. இது ஒரு உறை போன்ற ஒற்றை-இழை, எதிர்மறை உணர்வு ஆர்என்ஏ வைரஸ் ஆகும் 3.
வைரஸானது ஆரம்பத்தில் மேல் சுவாசக் குழாயில் பெருகி பின்னர் நிணநீர் முனைகளுக்கு பரவுகிறது, இது உமிழ்நீர் சுரப்பிகளில் அழற்சிக்கு வழிவகுக்கிறது 4. பாதிக்கப்பட்ட நபரின் மூக்கு, வாய் அல்லது தொண்டையில் இருந்து உமிழ்நீர் அல்லது சுவாசத் துளிகளுடன் நேரடி தொடர்பு மூலம் பரவுதல் ஏற்படுகிறது 1,5. இந்த வைரஸ் பின்வரும் வழிகளில் பரவலாம்1:
இருமல், தும்மல் அல்லது பேசுதல்
தண்ணீர் பாட்டில்கள் அல்லது கோப்பைகள் போன்ற உமிழ்நீர் கொண்டுள்ள பொருட்களைப் பகிர்தல்
விளையாட்டு, நடனம் ஆடுதல் அல்லது முத்தமிடுதல் போன்ற நெருங்கிய தொடர்பு நடவடிக்கைகள்
பாதிக்கப்பட்ட நபருடன் நீடித்த மற்றும் நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது பரவும் ஆபத்து அதிகமாகும் 5. தொற்று காலம் பொதுவாக பரோடிடிஸ் (உமிழ்நீர் சுரப்பிகளின் வீக்கம்) தொடங்கிய 2 நாட்களுக்கு முன்பு முதல் 5 நாட்கள் வரை இருக்கும் 5. இருப்பினும், பரோடிடிஸ் தொடங்கிய பிறகு 7 நாட்களுக்கு முன்பும் 9 நாட்கள் வரையிலும் உமிழ்நீரில் வைரஸைக் கண்டறிய முடியும், மேலும் இது 14 நாட்கள் வரை சிறுநீர் மற்றும் விந்துவிலும் இருக்கலாம் 5.
சில குழுவினர் பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கும், இதில் பின்வருபவர்கள் உள்ளடங்குவார்கள்1:
தடுப்பூசி போடப்படாத நபர்கள்
பள்ளி வயது குழந்தைகள் மற்றும் உயர்கல்வி மாணவர்கள்
உடல்நல பராமரிப்பு பணியாளர்கள்
பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) நோய்த்தோற்று உள்ள பகுதிகளுக்கு பயணிப்பவர்கள்
பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) நோயின் அறிகுறிகள்

கற்பனை படம், விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே
பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) நோயுள்ள சில நபர்கள் மிகவும் லேசான அறிகுறிகளை அனுபவிக்கிறார்கள், மேலும் சிலர் எந்த அறிகுறிகளையும் அனுபவிக்காமல் இருக்கலாம்7, இதனால் அவர்களுக்கு நோய் இருப்பதை உணர கடினமாகிறது.
கூடுதலாக, தொற்று ஏற்பட்ட உடனேயே பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) நோயின் அறிகுறிகள் தோன்றாது 7. பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) நோய்க்கான சராசரி அடைகாக்கும் காலம் 16 முதல் 18 நாட்கள் வரை இருக்கும், ஆனால் அது 12 நாட்கள் முதல் 25 நாட்கள் வரை மாறுபடலாம் 7.
லேசான பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) நோயானது பின்வரும் அறிகுறிகளை உள்ளடக்கியிருக்கலாம்7:
காய்ச்சல்
களைப்பு அல்லது அசதி
தலைவலி
தசை வலிகள்
பசியின்மை
இந்த ஆரம்ப அறிகுறிகளுக்கு சில நாட்களுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட நபருக்கு காதுகளுக்கும் தாடைக்கும் இடையில் அமைந்துள்ள உமிழ்நீர் சுரப்பிகளான பரோடிட் சுரப்பிகளின் வலிமிகுந்த வீக்கம் ஏற்படலாம் 1,7. பரோடிடிஸ் என்று அழைக்கப்படும் இந்த வீக்கம், முகத்தின் ஒன்று அல்லது இரண்டு பக்கங்களையும் பாதிக்கலாம் 7. வீங்கிய சுரப்பிகள் காதின் கோணத்தை மேல்நோக்கியும் வெளிப்புறமாகவும் தள்ளுகின்றன, இதனால் கன்னங்கள் வீங்கி, தாடை வீங்கி மென்மையாக மாறும், இது "சிப்மங்க் கன்னங்கள்" தோற்றத்தை அளிக்கும் 5,6,7. 70% க்கும் மேற்பட்ட பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) நோய் நிலைகளில் பரோடிடிஸ் ஏற்படுகிறது 4. வீக்கம் ஏற்படுவது தாடை எலும்பை உணர கடினமாக்கலாம் மற்றும் சாப்பிடுவது வலிமிகுந்ததாக இருக்கலாம் 5,7.
பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) நோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக குணமடைவார்கள் 1.
பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) நோயின் சிக்கல்கள்
பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) பொதுவாக லேசான நோயாகும் 7, ஆனால் சில சந்தர்ப்பங்களில், இது 5,7 பின்வருபவை உள்ளிட்ட கடுமையான சிக்கல்களுக்கு வழிவகுக்கும்:
ஆர்க்கிடிஸ்: விந்தகங்களின் அழற்சி, இதனால் விந்தகங்களின் அளவு குறையக்கூடும் (டெஸ்டிகுலர் அட்ராபி)
ஊஃபோரிடிஸ்: கருப்பைகள் மற்றும்/அல்லது மார்பக திசுக்களின் அழற்சி (மாஸ்டிடிஸ்)
பாங்க்ரியாடிடிஸ்: கணையத்தின் அழற்சி
மூளை அழற்சி: மரணம் அல்லது நிரந்தர ஊனத்திற்கு வழிவகுக்கும் மூளையின் அழற்சி
செவித்திறன் இழப்பு: இது தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இருக்கலாம்
செரிபெல்லார் அட்டாக்ஸியா: ஒருங்கிணைப்பு மற்றும் சமநிலையை சீர்குலைக்கும் ஒரு நிலை
வைரல் நிமோனியா: வைரஸ் தொற்று காரணமாக ஏற்படும் நுரையீரலின் அழற்சி
இரத்தப்போக்கு நிலைமைகள்: அதிகப்படியான இரத்தப்போக்கு அல்லது இரத்த நாள சேதத்தால் வகைப்படுத்தப்படும் கோளாறுகள்
பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) நோயறிதல்
பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) நோயானது பொதுவாக மருத்துவ மதிப்பீடு மற்றும் ஆய்வக சோதனைகள் மூலம் கண்டறியப்படும் 4,5. ஆரம்பத்தில், உங்கள் மருத்துவர் உங்கள் குழந்தையின் அறிகுறிகளை மதிப்பிடுவார், இதில் பொதுவாக காய்ச்சல், தலைவலி மற்றும் பரோடிட் சுரப்பிகளின் வீக்கம் ஆகியவை உள்ளடங்கும், மேலும் உடல் பரிசோதனை மேற்கொள்வார்4.
நோயறிதலை உறுதிப்படுத்த, பல ஆய்வக சோதனைகள் நடத்தப்படலாம். அத்தகைய ஒரு சோதனை ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ்-பாலிமரேஸ் செயின் ரியாக்ஷன் (ஆர்டீ-பீசிஆர்), இது கன்னம் அல்லது தொண்டையின் உட்புறத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு ஸ்வாப்பில் இருந்து நேரடியாக மம்ப்ஸ் வைரஸ் இருப்பதைக் கண்டறியும். பரோடிட் வீக்கம் தொடங்கிய 3 நாட்களுக்குள் மற்றும் பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) அறிகுறிகள் தோன்றிய 8 நாட்களுக்குள் இந்த சோதனை செய்யப்பட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 4,5.
மற்றொரு முக்கியமான சோதனை சீரம் இம்யூனோகுளோபுலின் M (IgM) ஆன்டிபாடி சோதனை ஆகும். இந்த இரத்த பரிசோதனை பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்)வைரஸுக்கு பதிலளிக்கும் விதமாக உடல் உற்பத்தி செய்யும் IgM மற்றும் IgG ஆன்டிபாடிகளை அடையாளம் காட்டுகிறது. இந்த சோதனை பொதுவாக நோய் சந்தேகிக்கப்படும் காலத்தில் நடத்தப்படுகிறது 4,5.
மருத்துவ அறிகுறிகள் மற்றும் ஆய்வக முடிவுகளை கூட்டிணைந்து உங்கள் மருத்துவருக்கு ஒரு துல்லியமான பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்)நோயறிதலை வழங்க முடியும் 4,5.
உங்கள் குழந்தையை பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) நோயிலிருந்து பாதுகாக்க எடுக்கப்படவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள்
உங்கள் குழந்தையை பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) நோயிலிருந்து பாதுகாக்க சிறந்த வழி தடுப்பூசி ஆகும்2 . பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) தடுப்பூசி வைரஸுக்கு எதிராக பாதுகாப்பை உருவாக்க நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுவதன் மூலம் செயல்படுகிறது 8. இது பொதுவாக தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்)மற்றும் ரூபெல்லா (எம்.எம்.ஆர்.) கூட்டிணைந்த தடுப்பூசியின் ஒரு பகுதியாக வழங்கப்படுகிறது, இது தட்டம்மை மற்றும் ரூபெல்லா ஆகியவற்றுக்கு எதிராகவும் பாதுகாக்கிறது2. எம்.எம்.ஆர். தடுப்பூசி இரண்டு மருந்தளவுகளில் வழங்கப்படுகிறது 2:
முதல் டோஸ்: 12 முதல் 15 மாதங்களுக்கு இடையில்
இரண்டாவது டோஸ்: 4 முதல் 6 வயதுக்கு இடையில்
பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்), தட்டம்மை மற்றும் பிற கடுமையான நோய்களுக்கு எதிரான விரிவான பாதுகாப்பிற்காக, உங்கள் குழந்தைக்கு 7-star பாதுகாப்பு திட்டத்தை நீங்கள் பரிசீலிக்கலாம். இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் அட்வைசரி கமிட்டி ஆன் வேக்ஸினேஷன் & இம்யூனிசேஷன் பிராக்டீசஸ் (ஏசிவிஐபீ)9 ஆல் பரிந்துரைக்கப்படுகிறது, இந்தத் திட்டம் உங்கள் குழந்தையை பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) உட்பட 14 நோய்களிலிருந்து பாதுகாக்க 7 தடுப்பூசிகளை வழங்குகிறது.
பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) தடுப்பூசி மற்றும் 7-star தடுப்பூசி திட்டம் பற்றி அறிய உங்கள் குழந்தையின் குழந்தை நல மருத்துவரிடம் பேசுங்கள்.
முடிவுரை
பயனுள்ள தடுப்பூசிகள் 1,2 கிடைத்தாலும், தொற்று வைரஸ் நோயான பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) நோய்1, குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க உடல்நலப் பிரச்சினையாகவே உள்ளது. பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) நோயின் காரணங்கள், அறிகுறிகள் மற்றும் சிக்கல்களைப் புரிந்துகொள்வது அதைத் தடுப்பதற்கு அவசியம்.
உங்கள் குழந்தை பரிந்துரைக்கப்பட்ட பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) தடுப்பூசியைப் பெறுவதை உறுதி செய்வது, நோய் தொற்றும் அபாயத்தையும் அதனுடன் தொடர்புடைய சிக்கல்களையும் அனுபவிக்கும் அபாயத்தையும் குறைக்கும் 2. பொதுமக்களின் ஆரோக்கியத்தைப்ப் பாதுகாப்பதிலும் தொற்று நோய்கள் பரவுவதைத் தடுப்பதிலும் பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) தடுப்பூசி மிக முக்கியமானது என்பதை நினைவில் கொள்ளுங்கள் 2.
பொன்னுக்கு வீங்கி (மம்ப்ஸ்) தடுப்பு அல்லது உங்கள் குழந்தையின் தடுப்பூசி நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கவலைகள் இருந்தால், நிபுணர் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலுக்காக உங்கள் மருத்துவரை அணுகுவது நல்லது.
References
- CDC. About. Mumps. https://www.cdc.gov/mumps/about/index.html (Accessed; Nov 2024).
- CDC. Mumps vaccination. Mumps. https://www.cdc.gov/mumps/vaccines/index.html (Accessed; Nov 2024).
- Mumps. (n.d.). Cdc.gov. , from https://wwwnc.cdc.gov/travel/yellowbook/2024/infections-diseases/mumps(Accessed; Nov 2024).
- Davison, P., Rausch-Phung, E. A., & Morris, J. (2024). Mumps. StatPearls Publishing.
- CDC. Clinical overview of. Mumps. https://www.cdc.gov/mumps/hcp/clinical-overview/index.html(Accessed; Nov 2024).
- Mumps. Familydoctor.org. https://familydoctor.org/condition/mumps/(Accessed; Nov 2024).
- CDC. Mumps symptoms and complications. Mumps. https://www.cdc.gov/mumps/signs-symptoms/index.html(Accessed; Nov 2024).
- CDC. Explaining how vaccines work. Centers for Disease Control and Prevention. https://www.cdc.gov/vaccines/hcp/conversations/understanding-vacc-work.html(Accessed; Nov 2024).
- Rao M IS, Kasi SG, et al. Indian Pediatr. 2024 Feb 15;61(2):113-125
CL Code: NP-IN-PVU-WCNT-240015 DoP Nov 2024
மேலும் படிக்கவும்
-
தடுப்பூசி மூலம் பருவகால காய்ச்சலில் (இன்ஃப்ளூயன்ஸா) இருந்து குழந்தைகள் மற்றும் பெரியவர்களைப் பாதுகாப்பது
19-03-2025Read more »
-
கைக்குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளில் இன்ஃப்ளூயன்ஸாவைத் தடுப்பது: ஒரு பெற்றோராக நீங்கள் என்ன செய்ய முடியும்?
19-03-2025Read more »
-
குழந்தைகளில் சின்னம்மை தடுப்பு: அறிகுறிகள் மற்றும் வெரிசெல்லா தடுப்பூசி மூலம் பாதுகாப்பு
12-03-2025Read more »