ஷிங்கிள்ஸ் (அக்கி) அரிப்பு மற்றும் அறிகுறிகளைப் புரிந்துகொள்வது: நீங்கள் என்ன தெரிந்து கொள்ள வேண்டும்

sticker banner

கற்பனை படம், விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே

முன்பு சின்னம்மையால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு பிற்காலத்தில் அக்கி (ஷிங்கிள்ஸ்) வரும் அபாயம் உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? 1 அக்கி (ஷிங்கிள்ஸ்) என்பது வலிமிகுந்த, கொப்புளங்கள் போன்ற சினப்பை ஏற்படுத்தும்  ஒரு வைரஸ் நோயாகும், இது பொதுவாக உடலின் ஒரு பக்கத்தில் தோன்றும் 1#. குழந்தைப் பருவத்தில் 2 சின்னம்மை நோய் பொதுவானது என்றாலும், வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் என்று அழைக்கப்படும் வைரஸ், அக்கி (ஷிங்கிள்ஸ்) 1 ஆக மீண்டும் செயல்படுவதற்கு முன்பு பல ஆண்டுகள் நரம்பு மண்டலத்தில் செயலற்ற நிலையில் இருக்கும். 

 

இந்த வலைப்பதிவில், சினப்பு, வலி ​​மற்றும் பிற தொடர்புடைய சிக்கல்கள் உட்பட ஷிங்கிள்ஸின் (அக்கி) தனித்துவமான அறிகுறிகளைப் பற்றி விவாதிப்போம். அக்கி (ஷிங்கிள்ஸ்) உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும் காரணிகள் மற்றும் உங்கள் ஆபத்தைக் குறைக்க உதவும் தடுப்பு உத்திகளையும் நாங்கள் விவாதிப்போம். 

 

ஆனால் முதலில், ஷிங்கிள்ஸின் (அக்கி) அர்த்தத்தைப் புரிந்துகொள்வோம்.

 

அக்கி (ஷிங்கிள்ஸ்) என்றால் என்ன?

 

மருத்துவ ரீதியாக ஹெர்பெஸ் ஜோஸ்டர் என்று அழைக்கப்படும் அக்கி (ஷிங்கிள்ஸ்) என்பது  வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ் 1 மீண்டும் செயல்படுவதால் ஏற்படும் ஒரு தொற்று ஆகும்,ஒரு நபர் சின்னம்மை 3 நோயிலிருந்து மீண்ட பிறகு நரம்பு மண்டலம் முழுவதும் கேங்க்லியோனிக் நியூரான்களில் இந்த வைரஸ் செயலற்ற நிலையில் இருக்கும். இது பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் செயல்படக்கூடும், பெரும்பாலும் வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸ்-குறிப்பிட்ட அணு சார்ந்த நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால், நரம்பு இழைகள் வழியாக தோலுக்கு பயணித்து, வலிமிகுந்த சினப்பை 1#,3#ஏற்படுத்துகிறது. 

 

அக்கி (ஷிங்கிள்ஸ்) எந்த வயதிலும் உருவாகலாம்4, ஆனால் இது முதன்மையாக 50 வயதுக்கு மேற்பட்டவர்களையும் பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் உள்ளவர்களையும் பாதிக்கிறது 5.  

 

இந்த நிலை உயிருக்கு ஆபத்தானது அல்ல என்றாலும் 4, இது தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும் 6# மற்றும் சில சந்தர்ப்பங்களில், போஸ்ட்ஹெர்பெடிக் நியூரால்ஜியா 6, ஹெர்பெஸ் ஜோஸ்டர் ஆப்தால்மிகஸ் 7, ஹெர்பெஸ் ஜோஸ்டர் ஓடிகஸ் 8, நிமோனியா 6 மற்றும் பாக்டீரியா தொற்று 6 போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.  

 

பொதுவான அக்கி (ஷிங்கிள்ஸ்) நோய் அறிகுறிகள்

Understanding-Shingles-Rash2

கற்பனை படம், விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே

அக்கி (ஷிங்கிள்ஸ்) உள்ளவர்கள் பெரும்பாலும் தோலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வலி, எரியும் அல்லது கூச்ச உணர்வுகளை அனுபவிக்கின்றனர், அந்த இடத்தில் இறுதியில் சினப்பு உருவாகும் 6#.   

அக்கி (ஷிங்கிள்ஸ்) வலி பொறுத்துக்கொள்ள முடியாததாக இருக்கலாம் மற்றும் வாரங்கள் அல்லது மாதங்கள் கூட நீடிக்கலாம் 6#, பெரும்பாலும் சின்னம்மை நோய்த்தொற்றின் போது ஏற்படும் வலியை விட அதிக வலிமிகுந்ததாக விவரிக்கப்படுகிறது 9#.  

ஷிங்கிள்ஸின் (அக்கி) வலியானது மின்சார அதிர்ச்சி, துளையிடும் உணர்வுகள் அல்லது தாங்க முடியாத எரியும் உணர்வு 10# போன்றது என்று பலர் விவரிக்கிறார்கள். 

 

அக்கி (ஷிங்கிள்ஸ்) வலி அன்றாட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களை பாதிக்கலாம், இதில் பின்வருப்வை அடங்கும்11#

  • வேலை உற்பத்தித்திறன்

  • குடும்பத்துடன் தரமான நேரம்

  • தூக்கம்

  • தினசரி நடவடிக்கைகளின் மகிழ்ச்சி

     

வலிக்கு கூடுதலாக, சில நபர்கள் பின்வருபவை போன்ற பிற அக்கி (ஷிங்கிள்ஸ்) அறிகுறிகளையும் அனுபவிக்கலாம் 6

  • காய்ச்சல்
  • குளிர் நடுக்கங்கள்
  • தலைவலி
  • வயிற்றுபோக்கு 

Understanding-Shingles-Rash3

கற்பனை படம், விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே

சினப்பு தோன்றுவதற்கு பல நாட்களுக்கு முன்பே ஷிங்கிள்ஸின் (அக்கி) ஆரம்ப அறிகுறிகள் ஏற்படலாம் 6

 

அக்கி (ஷிங்கிள்ஸ்) சினப்பு குறித்து புரிந்துகொள்ளுதல்

 

அக்கி (ஷிங்கிள்ஸ்) சினப்பு என்பது இந்த நோய்நிலையின் முதன்மை அறிகுறிகளில் ஒன்றாகும். இது பொதுவாக உடலின் இடது அல்லது வலது பக்கத்தில் ஒற்றைக் கோடாகத் தோன்றும், ஆனால் முகம், கைகள் அல்லது தலையின் ஒரு பக்கத்திலும் தோன்றலாம். சில சந்தர்ப்பங்களில், இது காதுகள் மற்றும் கண்களையும் கூட பாதிக்கலாம் 4,6.  

அரிதாக இருந்தாலும்,  குறிப்பாக பலவீனமான நோயெதிர்ப்பு மண்டலம் உள்ள நபர்களில், சினப்பானது அதிகம் பரவி, சின்னம்மை சினப்பை போன்று ஒத்திருக்கும் 6

 

அக்கி (ஷிங்கிள்ஸ்) சினப்பானது கொப்பளங்கள் ஏற்படுத்தும், அவை பொதுவாக 7 முதல் 10 நாட்களுக்குள் உலர்ந்து, மஞ்சள் நிற சிரங்குகளாக மாறும் 4,6. பொதுவாக, இந்த சினப்பானது உடலின் நடுக்கோட்டை கடக்காது 12. வயது வந்தவர்களில், அக்கி (ஷிங்கிள்ஸ்) பொதுவாக இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் சரியாகிவிடும், அதே நேரத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் பொதுவாக லேசான நிகழ்வுகளை அனுபவிக்கிறார்கள் 4. பெரும்பாலான வயது வந்தவர்களுக்கு அவர்களின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே அக்கி (ஷிங்கிள்ஸ்) வரக்கூடும் 4

 

இருப்பினும், சினப்பு நீங்கிய பிறகும் அக்கி (ஷிங்கிள்ஸ்) சிக்கல்களை ஏற்படுத்தலாம் 6. இந்த சிக்கல்களில் பின்வருபவை உள்ளடங்குபவை: 

  • போஸ்டெர்பெடிக் நியூரால்ஜியா (பீஎச்என்) 6: ஹெர்பெஸ் ஜோஸ்டர் உள்ள 4 நபர்களில் 1 நபரைப் பாதிக்கும் ஒரு நீண்டகால நரம்பு வலி

  • என்செபாலிடிஸ் 6: மூளையின் வீக்கம்

  • ஹெர்பெஸ் ஜோஸ்டர் ஓடிகஸ் 8: செவிப்புலன் மற்றும் சமநிலையை பாதிக்கும் ஒரு காது தொற்று, அக்கி (ஷிங்கிள்ஸ்) உள்ள 4 நபர்களில் 1 நபருக்கு ஏற்படுகிறது

  • ஹெர்பெஸ் ஜோஸ்டர் ஆப்தால்மிகஸ் (HZO) 7: பார்வை இழப்புக்கு வழிவகுக்கும் ஒரு கண் தொற்று

  • ராம்சே ஹன்ட் சின்ரோம் 8: முகத் தசைவாதம்  

  • நிமோனியா6
  • பாக்டீரியா தொற்றுகள் 6

 

 

அக்கி (ஷிங்கிள்ஸ்) சினப்பு மற்றும் வலிக்கான காரணங்கள் மற்றும் ஆபத்து காரணிகள்

 

ஹெர்பெஸ் ஜோஸ்டரின் நோய்க்குறிகளையும் அறிகுறிகளையும் இப்போது நீங்கள் அறிந்திருக்கிறீர்கள், அதன் காரணங்களைப் புரிந்துகொள்வோம். 

 

அக்கி (ஷிங்கிள்ஸ்) நோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய அறிகுறிகளை உருவாக்கும் அபாயத்தை பல்வேறு காரணிகள் அதிகரிக்கலாம்: 

  • முந்தைய சின்னம்மை தொற்று 1

  • குடும்ப வரலாறு13

  • வயது5

  • மனஅழுத்தம்13

  • மருத்துவ நோய்நிலைமைகள்:  

  • புற்றுநோய்13

  • இருதய நாள நோய் 13

  • நாள்பட்ட நுரையீரல் நிலைகள் (சிஓபீடி அல்லது ஆஸ்துமா போன்றவை) 14

  • தன்னுடல் தடுப்பாற்றால் நோய்கள் (முடக்கு வாதம், லூபஸ் அல்லது அழற்சி குடல் நோய் உட்பட) 13

  • நீரிழிவு நோய் 15

     

கூடுதலாக, கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களுக்கு, நோயறிதலைத் தொடர்ந்து ஆறு மாதங்கள் வரை ஷிங்கிள்ஸ்  உருவாகும் அபாயத்து  அதிகரிக்கலாம் 16. மேலும், புற்றுநோய் சிகிச்சைகள் - கீமோதெரபி, ரேடியோதெரபி, அதிக அளவு ஸ்டீராய்டுகள் மற்றும் இலக்கு வைக்கப்பட்ட புற்றுநோய் மருந்துகள் போன்றவை - ஆபத்தை அதிகரிக்கலாம் 13,17.  

Understanding-Shingles-Rash6

கற்பனை படம், விளக்க நோக்கங்களுக்காக மட்டுமே

ஹெர்பெஸ் ஜோஸ்டர் சினப்பு மற்றும் பிற அறிகுறிகளைத் தடுத்தல்

 

ஷிங்கிள்ஸுக்கு எதிரான தடுப்பூசி, அதன் சினப்பு மற்றும் பிற அறிகுறிகள் உட்பட, இந்த நிலையை உருவாக்கும் அபாயத்தைக் குறைப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும் 18. அக்கி (ஷிங்கிள்ஸ்) தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் 90% க்கும் அதிகமான செயல்திறன் கொண்டது 18, உடலின் இயற்கையான பாதுகாப்புகளை அதிகரிக்கிறது மற்றும் வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது 19

பின்வரும் நபர்களுக்கு தடுப்பூசி பரிந்துரைக்கப்படுகிறது18:

  • ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புகளைக் கொண்ட 50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்கள். 

  • நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமடைந்த 19 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெரியவர்கள். 

     

அக்கி (ஷிங்கிள்ஸ்) தடுப்பு பற்றிய கூடுதல் தகவலுக்கு, உங்கள் உடல்நல பராமரிப்பு வழங்குநரை அணுகவும்.  

 

முடிவுரை

 

வலிமிகுந்த வைரஸ் நோயான அக்கி (ஷிங்கிள்ஸ்), சின்னம்மை1 ஐ ஏற்படுத்தும் அதே நுண்ணுயிரியான வெரிசெல்லா-ஜோஸ்டர் வைரஸின் மீண்டும் செயல்பாட்டால் ஏற்படுகிறது. சின்னம்மை 1 ஐக் கொண்ட எவரையும் இது பாதிக்கலாம் என்றாலும், 50 5 வயதுக்கு மேற்பட்ட நபர்களில் இது மிகவும் பொதுவானது. சின்னம்மை நோயின் அறிகுறிகளில் பெரும்பாலும் வலி, காய்ச்சல் மற்றும் பிற அறிகுறிகளுடன் சேர்ந்து 6# வலி, கொப்புளங்கள் போன்ற சினப்பு ஆகியவை அடங்கும்.  

 

இந்த நிலை உயிருக்கு ஆபத்தானது அல்ல என்றாலும்4, ஹெர்பெஸ் ஜோஸ்டர் தாங்க முடியாத வலியை ஏற்படுத்தும் மற்றும் போஸ்ட்ஹெர்பெடிக் நியூரால்ஜியா 6# போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். 

 

சின்னம்மை உருவாகும் அபாயத்தைக் குறைக்க, குறிப்பாக நீங்கள் 50 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் தடுப்பூசி போடுவதைக் கருத்தில் கொள்ளுங்கள். அறிகுறிகள், ஆபத்து காரணிகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளைப் புரிந்துகொள்வதன் மூலம், இந்த வலிமிகுந்த நிலையில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்கலாம்.  

References

  1. Weaver BA. J Am Osteopath Assoc. 2009;109(6 Suppl 2):S2
  2. Overview: Chickenpox. (2023). Institute for Quality and Efficiency in Health Care (IQWiG).
  3. (N.d.). Nih.gov. Retrieved October 21, 2024, from https://pmc.ncbi.nlm.nih.gov/articles/PMC4754002/
  4. Shingles. (2024). Institute for Quality and Efficiency in Health Care (IQWiG).
  5. Harpaz R et al. MMWR Recomm Rep. 2008 Jun 6;57(RR-5):1-30.
  6. CDC. (2024, May 14). Shingles symptoms and complications. Shingles (Herpes Zoster). https://www.cdc.gov/shingles/signs-symptoms/index.html
  7. Kedar S et al. Journal of Neuro-Opthalmology;2019;39;220-231.
  8. Crouch AE. NCBI Bookshelf;2022;1-12- Intro (p.1)
  9. Shingles myths and facts. (2019, December 31). NFID; National Foundation for Infectious Diseases. https://www.nfid.org/resource/shingles-myths-and-facts/
  10. eMedicineHealth; 2021; 1-69; Shingles Treatment, Causes, Pictures & Symptoms (REF-143781)
  11. Johnson RW et Al. BMC Med. 2010;8(1):37.
  12. CDC. (2024b, September 30). Clinical overview of shingles (herpes zoster). Shingles (Herpes Zoster). https://www.cdc.gov/shingles/hcp/clinical-overview/index.html
  13. Marra F et al. Open Forum Infect Dis. 2020;7:1-8.
  14. Batram M et al. Dermatol Ther (Heidelb) (2021) 11:1009–1026.
  15. Huang CT, et al. J Clin Endocrinol Metab. 2022 Jan 18;107(2):586-597.
  16. Bhavsar A et al. Open Forum Infectious Diseases;2022;1-29.
  17. The immune system and cancer. (2014, October 29). Cancer Research UK. https://www.cancerresearchuk.org/about-cancer/what-is-cancer/body-systems-and-cancer/the-immune-system-and-cancer
  18. CDC. (2024c, October 3). Shingles vaccination. Shingles (Herpes Zoster). https://www.cdc.gov/shingles/vaccines/index.html CDC Understanding How Vaccines Work. Available from: https://www.cdc.gov/vaccines/hcp/conversations/understanding-vacc-work.html Accessed on 22nd Aug 2023 

Cl code: NP-IN-HZU-WCNT-240004 Dop: February 2025

மேலும் படிக்கவும்

  • ஷிங்கிள்ஸ் (அக்கி) மற்றும் நீரிழிவு நோய்: தொடர்பு, தாக்கம் மற்றும் தடுப்பு

    19-03-2025
    Read more »
  • இருதய நோய்கள் மற்றும் ஷிங்கிள்ஸ் (அக்கி): அவற்றின் தொடர்பு மற்றும் தாக்கத்தைப் புரிந்துகொள்வது

    19-03-2025
    Read more »
  • நுரையீரல் நோய் உள்ள நோயாளிகளில் ஷிங்கிள்ஸ்: ஆஸ்துமா மற்றும் சிஓபிடி இன் தாக்கம்

    19-03-2025
    Read more »
  • ஷிங்கிள்ஸ் (அக்கி) நோய் மற்றும் அறிகுறிகள்: நோய்க்குறிகள் மற்றும் தடுப்பு குறித்த முழுமையான கண்ணோட்டம்

    19-03-2025
    Read more »
  • ஹெர்பஸ் ஜோஸ்டர் (ஷிங்கிள்ஸ்[அக்கி])-இன் காரணங்களை தெரிந்துகொள்வது

    18-03-2025
    Read more »