“இது அறிவியல்”: புதிய ஷிங்கிள்ஸ் (அக்கி) விழிப்புணர்வு மற்றும் தடுப்பு பிரச்சாரத்திற்காக அமிதாப் பச்சன் அவர்களும், மனோஜ் பஹ்வா அவர்களும் ஜிஎஸ்கே உடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்

sticker banner

மும்பை: ஜிஎஸ்கே இன்று ஷிங்கிள்ஸ் (அக்கி) விழிப்புணர்வு குறித்த புதிய பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது, இதில் மூத்த நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் மனோஜ் பஹ்வா ஒன்றிணைந்து சிக்கன் பாக்ஸுக்கும் (சின்னம்மை) ஷிங்கிள்ஸுக்கும் (அக்கி அம்மை) இடையிலான அறிவியல் தொடர்பை விளக்குகிறார்கள். பிரச்சாரத் திரைப்படங்கள் இரண்டு நண்பர்களுக்கிடையேயான அன்றாட உரையாடல்களைப் பயன்படுத்தி சிங்கிள்ஸ் (அக்கி) மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு சிங்கிள்ஸ் (அக்கி) ஏற்படுவதற்கான அதிகரித்த வாய்ப்பு குறித்தும் விளக்குகிறார்கள்.1

 

இந்த பிரச்சாரம் குறித்து கருத்து தெரிவித்த மனோஜ் பஹ்வா, "நான் ஷிங்கிள்ஸ்க்கு2 (அக்கி) ஆளாகக்கூடிய வயதினரைச் சேர்ந்தவன், மேலும் ஜிஎஸ்கே -வின் ஷிங்கிள்ஸ் (அக்கி) விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மூலம் இந்த வலிமிகுந்த நோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஆபத்து காரணிகள்3 பற்றி நான் அதிகம் புரிந்துகொண்டேன். நான் பல உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளேன், மேலும் தொற்று நோய்களால் பாதிக்கப்படும்போது சுறுசுறுப்பான, நிறைவான வாழ்க்கையை நடத்துவது எவ்வளவு கடினம் என்பதை அறிவேன். ஷிங்கிள்ஸ் (அக்கி) வருவதற்கான காரணம் மற்றும் தடுக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து மக்களுக்குக் கற்பிக்கும் இந்த முயற்சியில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். 50 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள், ஷிங்கிள்ஸ் (அக்கி) மற்றும் அதன் தடுப்பு பற்றி தங்கள் மருத்துவர்களிடம் பேசவேண்டும் என ஊக்குவிக்கிறேன்" என்றார்.

 

ஒருவருக்கு சின்னம்மை இருந்திருந்தால், நரம்புகளில் செயலற்ற நிலையில் இருக்கும் வைரஸின் மறு-செயல்பாட்டினால் ஷிங்கிள்ஸ் (அக்கி) ஏற்படுகிறது.4 சின்னம்மை வரலாறு கொண்டவர்களுக்கும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் ஷிங்கிள்ஸ் (அக்கி) வருவதற்கான ஆபத்து 40% அதிகமாகும்.5 உயர் இரத்த சர்க்கரை அளவுகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனப்படுத்தலாம்,6 அது நிகழும்போது, சின்னம்மை வைரஸ் மீண்டும் செயல்படுவதற்கும், ஷிங்கிள்ஸ் (அக்கி) ஏற்படுவதற்கும் உள்ள அபாயத்தை அதிகரிக்கும்.7 

ஜிஎஸ்கே-வின் நோயாளி மேம்படுத்தல் தலைவரான விக்யேதா அகர்வால் கூறுகையில், "2023 ஏபீஐ-ஐபீஎஸ்ஒஎஸ் கணக்கெடுப்பின் படி ஷிங்கிள்ஸ் (அக்கி) இருந்தவர்களுக்கு கூட இந்த வலிமிகுந்த நோய்க்கான காரணம் தெரியாது என்பதைக் காட்டுகிறது.8 50 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களும் ஷிங்கிள்ஸ் (அக்கி) மற்றும் அதன் தடுப்பு பற்றி அறிந்திருப்பது அவசியம். ஷிங்கிள்ஸ் (அக்கி) ஏற்படுவதற்கான காரணத்தைப் பற்றியும், சின்னம்மைக்கும், ஷிங்கிள்ஸுக்கும் (அக்கி) இடையிலான தொடர்பை எளிமையான முறையில் விளக்க விரும்பினோம். அமிதாப் பச்சன் அவர்களூக்கு அனைத்து சமூகப் பிரிவுகளிலும் உள்ள மக்களுடன் இணையும் ஒப்பற்ற திறன் உள்ளது. பிரச்சாரத்தின் முகமாக அவரைக் கொண்டிருப்பது, அதிகமான மக்களை, குறிப்பாக வயதான பெரியவர்களை, ஷிங்கிள்ஸ் (அக்கி அம்மை) மற்றும் அதன் தடுப்பு பற்றி தங்கள் மருத்துவரிடம் பேசச் சென்று ஊக்குவிக்க உதவும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்றார்.

 

திஸ்மால்பிக்ஐடியா நெட்வொர்க்கின் ஒரு பிரிவான பிளிட்ஸ்கிரைக்கின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஹரிகிருஷ்ணன் பிள்ளை கூறுகையில், "இந்த பிரச்சாரத்தில் இரண்டு பிரச்சார படங்கள் உள்ளன. ஒரு படம் இரண்டு வயதான நண்பர்கள் பள்ளி நாட்களை நினைவு கூர்வதையும், சின்னம்மைக்கும் ஷிங்கிள்ஸுக்கும் (அக்கி) இடையிலான தொடர்பை பற்றி பேசுவதாகக் காட்டுகிறது, மற்றொன்று இரண்டு நண்பர்களுக்கிடையேயான ஒரு அக்கறையுள்ள பிணைப்பை சித்தரிக்கிறது மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு ஷிங்கிள்ஸ் (அக்கி) மூலம் ஏற்படும் பாதிப்பு அதிகரிப்பதை மையமாகக் கொண்டுள்ளது. 'இது அறிவியல்' பிரச்சாரம் 50 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் ஷிங்கிள்ஸ் (அக்கி) மற்றும் அதன் தடுப்பு பற்றி தங்கள் மருத்துவரிடம் பேசுமாறு வலியுறுத்துகிறது. இதன் மூலம் வரும் செய்திகள் தெளிவானவை மற்றும் நினைவில் நிற்கக்கூடியவை." என்றார்.

 

ஆர். பால்கி, இயக்குனர், படத்திற்கான படைப்பு நுண்ணறிவு குறித்து கருத்து தெரிவித்த அவர், "ஷிங்கிள்ஸ் (அக்கி) என்பது பலரால் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் ஒரு நோய். ஷிங்கிள்ஸ் (அக்கி) மற்றும் சிக்கன் பாக்ஸுக்கு (சின்னம்மை) இடையிலான தொடர்பைப் பற்றி எளிதில் புரிந்துகொள்ளக்கூடிய மற்றும் ஈர்க்கக்கூடிய வகையில் பேசுவதே சவாலாக இருந்தது. திஸ்மால்பிக்ஐடியா ஒரு எளிய மற்றும் வலுவான செய்தியை உருவாக்கிய விதம் எனக்கு திருப்திகரமாக இருந்தது. இந்த விஷயத்தில், படைப்பாற்றல் அல்ல, தெளிவுதான் காலத்தின் தேவையாக இருந்தது" என்றார்.

 

Thஇந்த பிரச்சாரப் படங்கள் யூடியூப் (மொபைல் மற்றும் இணைக்கப்பட்ட டிவி), கூகுள் டிஸ்ப்ளே, மெட்டா, தேர்ந்தெடுக்கப்பட்ட ஒடீடீ தளங்கள், பேடீஎம், கூகுள் பே மற்றும் பொது பொழுதுபோக்கு சேனல்கள் (ஜிஇசி), திரைப்படங்கள் மற்றும் இந்தி மற்றும் பிராந்திய மொழிகளில் செய்திகள் போன்ற பல வகைகளை உள்ளடக்கிய பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள் உட்பட பல தளங்களில் வெளியிடப்படும். கூடுதலாக, இந்த பிரச்சாரத்திற்காக பிரபல தொலைக்காட்சி வினாடி வினா நிகழ்ச்சியான கவுன் பனேகா குரோர்பதி (கேபிசி) உடன் ஒரு கூட்டாண்மை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

  • ஜிஎஸ்கே-வின் புதிய பிரச்சாரம், 7 முக்கியமான தடுப்பூசிகள் மூலம் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஆதரிக்குமாறு பெற்றோரைக் கேட்டுக்கொள்கிறது

    25-07-2024
    6 min read
    Read more »