ஜிஎஸ்கே-வின் புதிய பிரச்சாரம், 7 முக்கியமான தடுப்பூசிகள் மூலம் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை ஆதரிக்குமாறு பெற்றோரைக் கேட்டுக்கொள்கிறது

மும்பை: ஜிஎஸ்கே இன்று தனது புதிய மல்டிசேனல் பிரச்சாரமான 'அப் இந்தியா பனேகா 7-ஸ்டார்'-ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இந்தியாவின் எதிர்காலம் பெற்றோர்கள் கையில்தான் உள்ளது என்பதை இந்த பிரச்சாரம் எடுத்துக்காட்டுகிறது. சின்னம்மை, ஹெபடைடிஸ் ஏ, ஹெபடைடிஸ் பி, மூளைக்காய்ச்சல், தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ரூபெல்லா, நிமோனியா, இன்ஃப்ளூயன்ஸா, டிப்தீரியா (தொண்டை அழற்சி), டெட்டனஸ் (தசை கடினமாதல் நோய்), பெர்டுசிஸ் (கக்குவான் இருமல்), ஹெச்ஐபி தொற்று மற்றும் போலியோ உள்ளிட்ட 14 நோய்களுக்கு** எதிராக 7 அத்தியாவசிய தடுப்பூசிகள்* மூலம் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க இது அவர்களை ஊக்குவிக்கிறது.
1 முதல் 2 வயது வரையிலான குழந்தைகளுக்கு 7 தடுப்பூசிகளை இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ் (ஐஏபீ) பரிந்துரைக்கிறது: இரண்டு டோஸ் சின்னம்மை மற்றும் ஹெபடைடிஸ் ஏ, இரண்டாவது டோஸ் மூளைக்காய்ச்சல்# மற்றும் எம்எம்ஆர், பீசிவி மற்றும் டிடீபீ எச்ஐபி ஐபீவி இன் பூஸ்டர் டோஸ்கள் மற்றும் வருடாந்திர காய்ச்சல் டோஸ்1. இந்தியாவில் முதல் ஆண்டில் நோய்த்தடுப்பு பாதுகாப்பு அதிகமாக இருந்தாலும், 1வது பிறந்தநாளுக்குப் பிறகு தடுப்பூசி போடுவதை நிறுத்தும் விகிதம் அதிகரிக்கிறது. எனவே, நாட்டில் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் பகுதியளவு தடுப்பூசி போடப்பட்டவர்களாகவே உள்ளனர்2.
ஜி.எஸ்.கேயின் மருத்துவ இயக்குநரான பிரச்சாரப் படங்களின் மூலம் தெரிவிக்கப்படும் முக்கிய செய்தியானது 7 தடுப்பூசிகளின் முக்கியமான தேவை என்பதில் உள்ளது. இரண்டு பிரச்சாரப் படங்களிலும் வெவ்வேறு துறைகளில் இருந்து நிபுணர்களைக் காட்சிப்படுத்துகிறது, இதில் 7 அத்தியாவசியமான தடுப்பூசிகளை குழந்தை பெற்றிருக்க்கிறதா என்று ஒரு கிரிக்கெட் வீரரும், ஒரு விண்வெளி நிலைய இயக்குநரும், தங்களுடைய முக்கியமான பணியை இடையில் நிறுத்தி கேட்கின்றனர். இந்தியாவின் தற்போதைய ‘ஸ்டார்கள்’ இந்தியாவின் எதிர்கால ‘ஸ்டார்களின்’ பெற்றோர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த செய்தியை வழங்குவதுபோல இந்த படங்கள் காட்சிப்படுத்துகின்றன. இந்த இரு சக்திவாய்ந்த விளம்பரத் திரைப்படங்களும், ஒரு குழந்தைக்கு 7 தடுப்பூசிகள் வழங்கும் 7-ஸ்டார் பாதுகாப்பு கொடுக்கப்படுவது எவ்வளவு அவசியம் என்பதைத் தெளிவாக விளக்குகின்றன. அவர்கள் கூறியது "ஒரு குழந்தையின் முதல் பிறந்தநாளுக்குப் பிறகு, தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய கடுமையான நோய்களுக்கு எதிராக வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவது மிகவும் முக்கியம். தடுப்பூசி மூலம் வழங்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தியானது மறைமுகமாக சமூகத்திற்கும் பயனளிக்கிறது, இதன் மூலம் நோய் பரவுவதைத் தடுக்கலாம் மற்றும் ஆண்டிபயோடிக்ஸின் தேவையைக் குறைப்பதன் மூலம் அதிகரிக்கும் நுண்ணுயிர் எதிர்ப்பு அச்சுறுத்தலை நிவர்த்தி செய்யவும் உதவும். இந்த வயதில் கொடுக்கப்படும் 7 அத்தியாவசிய தடுப்பூசிகள் 14 ஆபத்தான நோய்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்கின்றன என்பதுடன், அவர்கள் ஆரோக்கியமான பெரியவர்களாக வளர உதவுகின்றன. இந்த பிரச்சாரத்தின் மூலம், 1 முதல் 2 வயது வரை பரிந்துரைக்கப்பட்ட தடுப்பூசிகளை தங்கள் குழந்தைகளுக்கு வழங்குவதன் முக்கிய தேவையை பெற்றோருக்குத் தெரிவிக்க விரும்புகிறோம்."

பிரச்சாரப் படங்களின் மூலம் தெரிவிக்கப்படும் முக்கிய செய்தியானது 7 தடுப்பூசிகளின் முக்கியமான தேவை என்பதில் உள்ளது. இரண்டு பிரச்சாரப் படங்களிலும் வெவ்வேறு துறைகளில் இருந்து நிபுணர்களைக் காட்சிப்படுத்துகிறது, இதில் 7 அத்தியாவசியமான தடுப்பூசிகளை குழந்தை பெற்றிருக்க்கிறதா என்று ஒரு கிரிக்கெட் வீரரும், ஒரு விண்வெளி நிலைய இயக்குநரும், தங்களுடைய முக்கியமான பணியை இடையில் நிறுத்தி கேட்கின்றனர். இந்தியாவின் தற்போதைய ‘ஸ்டார்கள்’ இந்தியாவின் எதிர்கால ‘ஸ்டார்களின்’ பெற்றோர்களுக்கு ஒரு சக்திவாய்ந்த செய்தியை வழங்குவதுபோல இந்த படங்கள் காட்சிப்படுத்துகின்றன. இந்த இரு சக்திவாய்ந்த விளம்பரத் திரைப்படங்களும், ஒரு குழந்தைக்கு 7 தடுப்பூசிகள் வழங்கும் 7-ஸ்டார் பாதுகாப்பு கொடுக்கப்படுவது எவ்வளவு அவசியம் என்பதைத் தெளிவாக விளக்குகின்றன.
இந்த பிரச்சாரம் தொலைக்காட்சி, டிஜிட்டல், சமூக ஊடகங்கள், வானொலி, சிடீவி (இணைக்கப்பட்ட தொலைக்காட்சி) மற்றும் ஒடீடீ போன்ற பல ஊடக தளங்களிலும் காட்சிப்படுத்தப்படும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசி அட்டவணையைப் பற்றி மேலும் அறிய தங்கள் குழந்தை மருத்துவர்களை அணுக வேண்டும் மற்றும் MyVaccinationHub.in போன்ற சரிபார்க்கப்பட்ட தகவல் ஆதாரங்களைப் பயன்படுத்த வேண்டும்.
References
- Indian Academy of Pediatrics (IAP) Advisory Committee on Vaccines and Immunization Practices (ACVIP): Recommended Immunization Schedule (2023) and Update on Immunization for Children Aged 0 Through 18 Years.
- Exploring the Pattern of Immunization Dropout among Children in India: A District-Level Comparative Analysis
Cl code: NP-IN-PVU-WCNT-250007 Dop: March 2025
மேலும் படிக்கவும்
-
“இது அறிவியல்”: புதிய ஷிங்கிள்ஸ் (அக்கி) விழிப்புணர்வு மற்றும் தடுப்பு பிரச்சாரத்திற்காக அமிதாப் பச்சன் அவர்களும், மனோஜ் பஹ்வா அவர்களும் ஜிஎஸ்கே உடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்
12-08-20246 min readRead more »